அஜித்தின் தந்தை மறைவிற்கு அவர் நடிக்க உள்ள ஏகே 62 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் சார்பில் எந்த இரங்கலும் தெரிவிக்கவில்லை என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கடுமையாக தாக்கி வருகின்றனர். தற்போது  இது பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடும் ட்விட்டுகள் வைரலாகி வருகிறது.


லைகா நிறுவனம்


லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் முதன்முறையாக நடிக்க உள்ள ஏகே 62 படம் தொடங்கியது முதலே பல்வேறு சிக்கல்களும், திருப்பங்களும் அரங்கேறி வருகிறது. லைகா நிறுவனமானது தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் நிறுவனமாக உலா வருகிறது. 2014ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான லைகா நிறுவனம் தங்களது முதல் படத்தையே விஜய் நடிப்பில் தயாரித்தது. அவர்களது தயாரிப்பில் உருவான கத்தி படம் மாபெரும் வசூலை குவித்தது. இதுமட்டுமின்றி தெலுங்கு படங்களையும் தயாரித்து உள்ளது. 


பிரம்மாண்ட படத்தயாரிப்பிலும், அதை பிரம்மாண்டமாக ப்ரமோஷன் செய்வதிலும் கில்லாடியாக திகழும் லைகா நிறுவனத்துடன் முதன்முறையாக கைகோர்த்திருக்கிறார் அஜித்.


அஜித் தந்தை மறைவு


இப்படி இருக்கும் சூழலில், அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் (84) பக்கவாதத்தால் 4 ஆண்டுகாலமாக சிரமப்பட்டு வந்த நிலையில், இன்று காலை தூக்கத்திலே உயிரிழந்தார். அஜித்தின் தந்தை மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். 


இதற்கிடையில், லைகா ப்ரொடக்ஷனில் தயாரிப்பில் ஏகே 62 படத்திற்கு கமிட் ஆகியிருக்கும் அஜித், அவரது தந்தை மறைவிற்கு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எந்த இரங்கல் குறிப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 


அதனால் அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் லைகா நிறுவனத்தை கடுமையாக தாக்கி வருகின்றனர். அதாவது, அஜித்தின் தந்தை மறைவிற்கு, அவர் நடிக்க உள்ள தயாரிப்பு நிறுவனம் இரங்கல் செய்தி எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் சமூக வலைதளத்தில் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


குழப்பத்தில் ரசிகர்கள்


இதற்கிடையில், அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் உயிரிழந்ததால், ஏகே 62 படப்பிடிப்பு உடனே தொடங்கப்படுமா? என  சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் ஏகே 62 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அஜித்தின் தந்தை இன்று மறைந்ததால், சில நாட்கள் தாமதமாகவே வெளியாகும் என்று கூறப்படுகிறது.


ஆனால் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இதுபோன்று எந்த வித அறிவிப்பும் வரவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். ஒரு பக்கம் படம் பற்றி ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில், அஜித்தின் தந்தை மறைவிற்கு லைகா  ப்ரொடக்ஷன் எந்தவித இரங்கலும் தெரிவிக்காததால் கடுமையாக சமூக வலைதளத்தில் திட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.