Ajith Surgery News: கோலிவுட்டின் முன்னணி நடிகரான நடிகர் அஜித் குமார், நேற்று திடீரென சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான், சென்னை எனத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதனிடையே அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மற்றும் கோலிவுட் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் நடிகர் அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் நேற்று முதல் தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது உடல்நலன் குறித்து முக்கியத் தகவலை தற்போது பகிர்ந்துள்ளார். தனியார் ஊடகத்துக்கு அளித்துள்ள விளக்கத்தில் சுரேஷ் சந்திரா தெரிவித்திருப்பதாவது:
“நடிகர் அஜித்துக்கு மூளையில் கட்டியெல்லாம் இல்லை. அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவுமில்லை. அஜித்தின் நெருங்கிய நண்பரான வெற்றி துரைசாமி உள்ளிட்டோரின் திடீர் மறைவுக்குப் பின் அஜித் கொஞ்சம் மனதளவில் சோர்ந்து போன அஜித், தன்னை சுற்றி இருப்பவர்களை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி வந்தார். அதன்படி, அவர் சாதாரண செக்-அப்புக்குதான் மருத்துவமனைக்குச் சென்றார்.
அங்கே சில ஸ்கேன் உள்ளிட்ட சகல டெஸ்டுகளும் எடுத்த போது காதுக்கு கீழே உள்பகுதியில் சின்ன புடைப்பு உள்ளதைக் கண்டறிந்தனர். மேலும், இதனால் பாதிப்பு இல்லை அதே சமயம் அரை மணி நேரத்தில் இதை சரி செய்து விடலாம் என்று மருத்துவர் சொன்னதை அடுத்து உடனடியாக சரி செய்ய சொல்லி விட்டார்..
இதை அடுத்து அந்த வீக்கம் அரை மணி நேர அவகாசத்தில் நீக்கப்பட்டு, நேற்றிரவே ஜெனரல் வார்டுக்கு வந்துவிட்டார். இன்று அஜித் டிஸ்சார் ஆகி விடுவார். இந்த மைனர் ஆபரேஷனால் அவரின் எந்த பணியும் ஒரு சதவீதம் கூட பாதிப்படையாது..
அதே போல், திட்டமிட்டப்பட்டி வரும் மார்ச்.18ஆம் தேதி அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங்கிறகு அஜித் கிளம்பி விடுவார். 3 மாத ஓய்வு என்பதெல்லாம் தவறான தகவல்” என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியதாக தகவல்