சினிமாவில் நடிகர், நடிகைகள் காதல் திருமணம் செய்து கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் மிகவும் பிரபலமான ஜோடி தான் அஜித் குமார் மற்றும் ஷாலினி. அமர்க்களம் படம் மூலமாக காதலித்து கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வரும் எப்ரல் 24 ஆம் தேதி. இருவரும் தங்களது 25ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாட இருக்கின்றனர். 

Continues below advertisement


இத்தனை ஆண்டுகளாக எந்தவித கிசுகிசுவிலும் சிக்காமல் இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து பல காதல் ஜோடிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர். இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்று ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். நடிகை ஷாலினி திருமணத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. 




சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி, பின்னர் ஹீரோயினாக மாறியவர். இவர் ஹீரோயினாக நடித்த காதலுக்கு மரியாதை, அமர்க்களம், அலை பாயுதே, கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் என 5 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும்,  இந்த 5 படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாகும். தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் பல படங்களிலும் நடித்துள்ளார் ஷாலினி.
 
இந்த நிலையில் தான் ஷாலினி கடந்த 3 வருடங்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்த்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில், அதில் தன்னுடைய மற்றும் தன்னுடைய பிள்ளைகள், கணவர் ஆகியோர் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அனோஷ்காவின் டேட் நைட் என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நீங்க டேட் நைட் செய்வது உங்க அப்பாவுக்கு தெரியுமா? என கமெண்ட் போட்டு வந்தனர். இந்த பழைய புகைப்படம் மீண்டும் வைரலாக துவங்கி உள்ளது.