நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இந்தப்படத்தின் இராண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்தப்படத்திற்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுத அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். 


இது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியதாவது…


“டிமான்டி காலனி திரைப்படம் எனக்கும் எனது குழுவின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் 'டிமான்டி காலனி 2' பற்றி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தனர். இத்தகைய ஊக்கங்களும் நேர்மறையான வார்த்தைகளும் திரைக்கதையை வடிவமைக்க என்னைத் தூண்டின. அருள்நிதி சாரை அணுகியபோது, ​​அவருக்கும் திரைக்கதை பிடித்திருந்தது. உடனே நாங்கள் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தோம்.



                                                                     


திரைத்துறையில் அவரது வளர்ச்சி இப்போது அதிகரித்திருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை நம்பி எனது இயக்குனர் பாதையை தொடங்கி வைத்த அருள்நிதி மீண்டும் என்னை நம்பி தயாரிப்பாளராக என்னை மாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தனிப்பட்ட முறையில், ‘The Friday The 13th’, ‘Halloween’ to the contemporary ‘The Conjuring Universe’ என்ற ஹாலிவுட் படங்களின் தொடர் வரிசை என்னை எப்பொழுதும் பிடிக்கும். 


தெளிவான உத்வேகத்துடன், டிமான்டி காலனியை ஒரு சமரசமற்ற ஹார்ட்-கோர் ஹாரர் தொடராக முன்னோக்கி எடுத்துச் செல்லவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம், இது இனி அடுத்தடுத்த பாகங்களாக வெளிவரும்.



                                                                 


ஜூலை 2022 க்குள் டிமான்டி காலனி 2 இன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். தற்போது, ​​முன்னணி கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அதன்படி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்.” என்று பேசியிருக்கிறார். விக்ரமை வைத்து இவர் இயக்கிய கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.