பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகர் அஜய் தேவ்கன். இவர் தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு டீன் ஏஜில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மற்ற சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் நடிகர்கள் மீடியாக்களை சந்திப்பதை மிகவும் ஜாலியாக அணுகுவார்கள் . நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது என பத்திரிக்கையாளர் சந்திப்புகளையும் கூட அதகளப்படுத்துவார். ஆனால் அஜய் தேவ்கன் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதைத்தவிர , வெளிப்படையாக ரசிகர்களிடமோ , மீடியாக்களிடமோ பேசுவது குறைவுதான்.


இது அவரவர்களின் தனிப்பட்ட குணங்களாக பார்த்தாலும் கூட தான் இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டதாக நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.






அஜய் தேவ்கன்  நடிப்பு மற்றும் இயக்கத்தில் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் திரைப்படம் ரன்வே 34. இந்த படத்தில் அமிதாப்பச்சன் , ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ஆல்யாபட், ரன்வீர் சிங் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அஜய் தேவ்கன், தனது மனநலம் மற்றும் அதற்கான சிகிச்சை குறித்து பகிர்ந்துகொண்டார்.


அதில், “நான் எதையுமே அதிகமாக யோசிக்கக்கூடிய ஆள் , மற்றவர்களிடம் மனம் திறந்து பேசமாட்டேன் . இது என்னிடம் எனக்கே பிடிக்காத குணம் . இதை நானே சரி செய்ய வேண்டும் என விரும்புகிறேன் .அதனால்தான் ஒதுங்கி இருக்கிறேன். என்றார். இதனிடையே குறுக்கிட்ட ரன்வீர் சிங் , உங்களை ரிலாக்ஸாக வைத்திருக்க நீங்க என்ன செய்வீர்கள் என கேட்க , அதற்கு பதிலளித்த அஜய் தேவ்கன் “தெரபி , ஜர்னலிங் போன்றவைதான் தீர்வு” என்றார். தான் மனநல சிகிச்சை எடுக்க முயற்சித்ததாகவும் அது தனக்கு கைகொடுக்கவில்லை என்றும் தெரிவித்த அஜய் தேவ்கன், தான் அது குறித்து வெளிப்படையாக பேச முடியாது என தெரிவித்துள்ளார்.


முன்னதாக அஜய் தேவ்கனிடம் , உங்களுக்கும் காஜோலுக்கும் எப்படி காதல் மலர்ந்தது என கேட்டதற்கு “உண்மையில் தெரியாது. நாங்கள் சந்தித்தோம் ஒன்றாக பழகினோம். காதலை சொல்லாமலேயே ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பிதோம். அதன் பிறகு திருமணம் வரை கொண்டுபோனது. எங்கள் இருவரின் எண்ணங்களும் ஒரே மாதிரியானவை , நாங்கள் ஒன்றாக பயணிக்க முடியும் என தோன்றியது“ என்றார்.