மே 30 அன்று வெளியாகும் இந்த ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ ஹிந்தி பதிப்பில், ஜாக்கி சான் நடித்த ஐகானிக் கேரக்டரான மிஸ்டர் ஹான் எனும் கதாபாத்திரத்துக்கு  அஜய் தேவ்கன் குரல் கொடுத்துள்ளார்; அவரது மகன் யுக் தேவ்கன் லி ஃபாங் எனும் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்து தனது முதல் டப்பிங்  மூலம் ஹிந்தி திரையிலகில் அறிமுகமாகிறார் யுக். 

Continues below advertisement

மும்பையில் நடைபெற்ற ஒரு பிரமாண்ட நிகழ்வில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் அவரது மகன் யுக் தேவ்கன் இணைந்து சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா தயாரித்த ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ திரைப்படத்தின் ஹிந்தி டிரெய்லரை வெளியிட்டனர். இவ்விருவரும் முதன்முறையாக ஒரு சர்வதேச திரைப்படத்துக்காக இணைந்து பணியாற்றியுள்ளனர். அஜய் தேவ்கன், ஜாக்கி சான் நடித்த மிஸ்டர் ஹான் என்ற கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ள நிலையில், யுக் தேவ்கன் பென் வாங் நடித்த லி ஃபாங் என்ற கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து அறிமுகமாகிறார்.

Continues below advertisement

இது அஜய் தேவ்கனின் சினிமா வாழ்க்கையில் சர்வதேச படத்திற்காக குரல் கொடுத்த முதல் அனுபவம். யுக் தனது இயல்பான ஈர்ப்பு, உற்சாக குரல் மூலம் இந்த புகழ்பெற்ற வரலாற்று திரைப்படத்தைப் புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் திறமையை வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

குரு மற்றும் சீடன் இடையிலான உறவை மையமாகக் கொண்ட கதைக்கேற்ப, அஜய் மற்றும் யுக் இன் உண்மையான தந்தை-மகன் உறவு, இந்த திரைப்படத்துக்கு உணர்வுப்பூர்வமான ஆழத்தையும்,  எதார்த்தத்தையும் சேர்த்திருக்கிறது.

நியூயார்க் நகரத்தை மையமாகக் கொண்ட இந்த படம், புதிதாக பள்ளியில் சேரும் குங் ஃபூ மாணவன் லி ஃபாங் தனது புதிய சூழலுக்கு ஏற்றபடி எவ்வாறு இணைகிறார், அங்கு ஏற்படும் எதிர்பாராத நட்புகள், ஒரு உள்ளூர் கராத் தே சாம்பியனுடன் சந்திக்க வேண்டிய கடுமையான சவால்கள் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை  சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது. அவரது ஆசிரியரான மிஸ்டர் ஹான் மற்றும் மைதானத்தில் புகழ்பெற்ற டேனியல் லாரூசோ (ரால்ஃப் மேக்கியோ) ஆகியோரின் வழிகாட்டுதலால், லி ஃபாங் தன்னைத்தானே உணர்ந்துகொள்ளும் தன்மை, தைரியம் மற்றும் வளர்ச்சி அடையும் பயணத்தை எப்படி மேற்கொள்கிறார் என்பதைப் பற்றியும் பேசுகிறது இந்த ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’. 

‘கராட்டே கிட்: லெஜண்ட்ஸ்’ திரைப்படம் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியாவால் 2025 மே 30 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.