Aishwarya Rai : நீங்க குழப்பத்தில இருக்கீங்க! செய்தியாளருக்கு நச் என பதிலளித்த ஐஸ்வர்யா ராய்!

Aiswarya Rai Bachan : பொன்னியின் செல்வன் படத்தில். நடிகை ஐஸ்வர்யா ராய் 'நந்தினி' எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்ததை நான் பெருமையாக கருதுகிறேன்.

Continues below advertisement

Aishwarya Rai : என்ன இரண்டாவது படமா? குழப்பத்தில் இருக்கீர்களா என கிண்டல் செய்த ஐஸ்வர்யா ராய்... PS1 ட்ரைலர் வெளியிட்டு விழா

Continues below advertisement

இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் முதல் பாகம் வெளியாகியுள்ளது.  

மந்தாகினி தேவி - ஐஸ்வர்யா ராய்

குழப்பிய செய்தியாளர் :

இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் 'நந்தினி தேவி'  எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்த காவிய படத்தில் நடித்ததிலும் இதில் நான் ஒரு அங்கமாக இருப்பதையும் மிகவும் பெருமையாக கருதுகிறேன். மேலும் மீண்டும் இயக்குனர் மணி சார் படத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார்.

செய்தியாளர் கேட்ட மற்றுமொரு கேள்விக்கு நச் என ஒரு பதிலை கொடுத்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நீங்கள் நடித்துள்ள இரண்டாவது படமான "பொன்னியின் செல்வன்" படத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்குறீர்கள் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஐஸ்வர்யா ராய் மிகவும் கூலாக என்ன இரண்டாவது படமா? நீங்கள் மிகவும் குழம்பி போய் உள்ளீர்கள் என நினைக்கிறேன். மணி சார் இயக்கத்தில் வெளியான "இருவர்" படத்தில் தான் நான் முதன் முதலில் அறிமுகமானேன். அதனை தொடர்ந்து குரு, இராவணன், பொன்னியின் செல்வன் என நிறைய படங்களில் அவருடன் பணிபுரிந்துள்ளேன் என நச் என்ற பதிலை கூறியுள்ளார். இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த படங்கள் அனைத்திலும் அவரின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.  

 

ஐஸ்வர்யா ராய் வருகை :

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையத்தில் இருந்து சென்னை வந்து இறங்கினர் ஐஸ்வர்யா ராய். பொன்னியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராய் ஒரு கருப்பு சல்வாரில் பிந்தியுடன் காரில் இருந்து இறங்கி ரெட் கார்பெட் வழியாக ஊடகத்திற்கு புன்னகையுடன் போஸ் கொடுத்து தனது ரசிகர்களுக்கு கை அசைத்தார். அந்த வீடியோ இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

திரையுலத்தின் எதிர்பார்ப்பு: 

சரித்திர காவியமான கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இப்படம். இது மணிரத்னத்தின் 23 ஆண்டு கனவு திரைப்படம். ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலமே இப்படத்திற்காக காத்து இருக்கிறார்கள். இது நிச்சயம் காலம் கடந்து அடுத்த தலைமுறையை போய் சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola