ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மறைந்த பாட்டியின் நினைவு நாளை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தமிழ் சினிமாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவான இப்படத்தின் மூலம்  இசையமைப்பாளராக  அனிருத் அறிமுகமானார்.


3 திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் பெற்ற சிறப்பான வரவேற்பை தொடர்ந்து  வை ராஜா வை என்ற படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடித்தனர். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.


லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் அவ்வப்பொழுது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டி வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மறைந்த பாட்டியின் நினைவு நாளை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,


இந்த மரண உலகத்தை விட்டுச் சென்றாய்...இருப்பினும்
ஈடுசெய்ய முடியாத நினைவுகளை என்னுள் விட்டுச் சென்றாய்...
என் குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதி உங்களின் கண்டிப்பு, பாசமிகு புன்னகையால் மட்டுமே மிளிர்கிறது..பெருமையுடனும் நன்றியுடனும் நான் சொல்கிறேன்..
இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பது நீங்கள் என்னுள் பதித்தவை.  இங்கு இருந்ததற்கு நன்றி...இப்பொழுதும் என்றென்றும் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறேன் என் பாதுகாவலர் தேவதை அம்மையா” என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். 


முன்னதாக தன் தந்தை ரஜினியை வைத்து லால் சலாம் படம் இயக்குவது குறித்து ஐஷ்வர்யா உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் “நான் உங்களைப் பார்த்து வளர்ந்தேன். உங்களை இயக்கும் நாள் வரும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.  நான் உங்களை ரசித்திருக்கிறேன். நான் உங்களை வணங்குகிறேன். உங்களுடன் சேர்ந்து இந்த உலகை பார்க்கிறேன். நீங்கள் தான் நான் என்பதை உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் அப்பா. இன்னும் இன்னும் அதிகமாக நான் உங்களை நேசிக்கிறேன்" என கூறியிருந்தார்.


மேலும் படிக்க 


Rs.1000 Ration Card : மகளிர் உரிமைத்தொகை ரூ.1000: யாரெல்லாம் தகுதியானவர்கள்? யாருக்கெல்லாம் இல்லை? எங்கு விண்ணப்பிக்கவேண்டும்?


Titan Stock Rekha: டைட்டனால் அடித்த ஜாக்பாட்.. நிமிடங்களில் ரூ.500 கோடி ஈட்டிய ரேகா ஜுன்ஜுன்வாலா.. நடந்தது என்ன?