லால் சலாம் படக்குழுவினர் மற்றும் தன் மகன்களுடன் தமிழ் புத்தாண்டு கொண்டாடி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்.


ரஜினிகாந்தின் மகள்:


கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் - ஸ்ருதி ஹாசன் இணைந்து நடித்த  ‘3’ படத்தின் மூலம்  நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக அறிமுகமானார்.  இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தன.


தொடர்ந்து 2015ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் - பிரியா ஆனந்த் நடித்த வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். ஆனால் இந்தப் படம் எதிரிபார்த்த அளவுக்கு ஓடாத நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்  ஹிந்தி திரைப்படத்தை இயக்குவதாக ஐஸ்வர்யா முன்னதாக அறிவித்திருந்தார்.


லால்சலாம்:


ஆனால் இவற்றுக்கிடையே தமிழிலேயே மூன்றாவது படத்தை எடுக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முடிவு செய்த நிலையில், இது குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதன்படி லால் சலாம் என படத்துக்கு தலைப்பிடிப்பட்ட நிலையில், விஷ்ணு விஷால்,  விக்ராந்த் ஆகியோர் இந்தப் படத்தில் நடிப்பதாகவும், நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


ஸ்போர்ட்ஸ் டிராமாவை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்:


லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.  கலை இயக்குனராக ராமு தங்கராஜ்,  படத்தொகுப்பாளராக பிரவீன் பாஸ்கர் ஆகியோர் பணியாற்றுகின்றனர். 


இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று லால் சலாம் படக்குழுவினர் மற்றும் தன் மகன்களுடன் தமிழ் புத்தாண்டு கொண்டாடி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார். மேலும் படக்குழுவினருக்கு விருந்தளித்த புகைப்படங்கள்,  தன் மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றையும் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். 


“என் உலகம், என் குடும்பம், நம் வாழ்க்கை தான் நம் சிரிப்பை நிர்ணயிக்கிறது”  என்ற கேப்ஷனுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


மேலும் படிக்க: Madhavan - Sudha kongara: நட்புக்கு இல்லையே எல்லை.. 20 ஆண்டுகள் தோஸ்த்டா..! மாதவனுடன் லஞ்ச் சாப்பிடும் சுதா கொங்கரா..!


Simran on Monal: 'உன்னை மிஸ் பண்றோம் மோனு..' தங்கை நினைவால் தவிக்கும் சிம்ரன்! நடிகை மோனலின் 21ம் ஆண்டு நினைவு நாள்..!