பாலிவுட் ஸ்டார்களை விட அவர்கள் வீட்டு வாரிசுகளுக்குதான் கூடுதல் மவுசு இருக்கும். பென்சில் விளம்பரத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராயின் சிறுவயது புகைப்படம் ஆன்லைனில்அண்மையில் வைரலானது. இதையடுத்து இந்தப் படத்துடன் ஒப்பிட்டு அவரது மகள் ஆராத்யா பச்சனுடன் அவரது வினோதமான ஒற்றுமையை ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்ஸ்டாகிராமில், ’Rarephotoclub’ என்னும் பக்கத்தில் சிறுமி ஐஸ்வர்யா கன்னத்தில் பென்சிலை வைத்துக்கொண்டு சிரித்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.






புகைப்படத்தில், ஐஸ்வர்யா ஷார்ட் ஹேருடன் ஒரு வெள்ளை காலர் டாப் அணிந்து போஸ் கொடுத்திருப்பார்,. "புதுமையான பென்சில்களுக்கான மாடலிங். யார் என்று யூகிக்கவும்" என்று படத்துக்கு கேப்ஷன் எழுதப்பட்டிருந்தது.



இந்த புகைப்படத்திற்கு பதிலளித்த ரசிகர்கள், ஐஸ்வர்யாராய் என கருத்துகளைக் குவிக்கத் தொடங்கினார்கள். அவர்களில் பலர் ஆராத்யா பச்சனை அவருடன் ஒப்பிட்டனர். ஒரு நபர், "ஐஸ்வர்யாவின் மகள் அவருடைய கார்பன் காப்பி”, என்றார். மற்றொரு ரசிகர், "ஆராத்யா தனது தாயைப் போலவே இருக்கிறார்" என்று எழுதியிருந்தார். ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் நடிகர் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா. அபிஷேக் ஐஸ்வர்யா இருவரும் 2007ல் மும்பையின் ஜூஹூவில் உள்ள அமிதாப் பச்சனின் இல்லமான பிரதீக்ஷாவில் ஒரு தனிப்பட்ட வைபவத்தில் திருமணம் செய்து கொண்டனர். நவம்பர் 16, 2011 அன்று அவர்கள் தங்கள் மகள் ஆராத்யாவை வரவேற்றனர்.


 


அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அபிஷேக் பச்சன், ‘எப்படிப் பணிவாகவும் நன்றியுடனும் இருக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ஆராத்யாவுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.