கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் வெற்றியை பதிவு செய்தது. கே.ஜி.எஃப் திரைப்பத்தின் முதல் பாகம் அடுத்த பாகத்தின் தொடர்ச்சியோடு முடிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காக முழு வீச்சில் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கொரோனா காலக்கட்டத்தால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட படத்தின் நாயகன் யஷ் , தன்னுடைய ரசிகர்கள் குறித்தும் , மக்கள் மத்தியில் தனக்கு கிடைத்திருக்கும் பவர் குறித்தும் பகிர்ந்திருக்கிறார். அதில் “ படம்தான் ஒரு நடிகனுக்கான பவரை கொடுக்குது, ஒரு படம் நல்லா இருந்தா ஆடியன்ஸுக்கு பிடிக்கும். ஆடியன்ஸுக்கு பிடிச்சுட்டா , அவங்களிடம் இருந்து நமக்கு பவர் வரும். இல்லைனா பவர் கட்தான்.கே.ஜி.எஃப்-போட வெற்றியை எதிர்பார்த்தீர்களா அப்படினு கேட்டா.. எல்லா நடிகர்களுடைய கனவுமே இதுதாங்க. ஆடியன்ஸ் யாரையாவது ரசித்தால் அவங்களை எங்கேயோ கொண்டு சென்று விடுவார்கள். அவ்வளவுதான்.. நாம ஒன்றுமே இல்லை. இயக்குநர்கள்தான் ஒரு உலகத்தை உருவாக்குவாங்க. அதில் நடிக்க நடிகர்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும் அவ்வளவுதான். எல்லா நடிகர்களுமே இப்படியான நடிப்பை பார்த்து பார்த்துதானே வளர்ந்திருக்கிறார்கள். அதனால புது நடிகர்கள் வந்தாலும், ஆக்ஷன்ல நடிக்க எளிமையாக நடிக்க வந்துவிடும். நாங்க எல்லாம் திரையரங்கில் ரசிகர்களாக இருந்து வந்தவர்கள்தானே“ என தன்னடக்கத்துடன் பதிலளித்திருக்கிறார் யஷ் .