இந்தி உலகின் பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் (Abhishek Bachchan) மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் (Aishwarya Rai Bachchan)மகள் ஆராத்யா (Aaradhya Bachchan) பள்ளியில் பேசும் வீடியோவை பாராட்டி அமிதாப் பச்சன் ரசிகர்கள் இணையத்தில் பகிந்து வருகின்றனர். அதில் ரசிகர் ஒருவருக்கு அதற்கு அபிஷேக் பச்சன் பதில் அளித்துள்ளார்.
ஆராத்யா கடந்த ஜனவரி மாதம், குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி நிகழ்ச்சியில் பேசியது இணையத்தில் வைராலாகியது. ஆராத்யா அழகு மழலையுடன் தெளிவாக பேசுவதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரசிகர் ஒருவர், ஆராதனா அவரது பெரியப்பா, இலக்கியவாதி ஹரிவன்ஷ் ராய் பச்சனை (Harivansh Rai Bachchan) போலவே மிகவும் சிறப்பாக உச்சரிப்புடன் பேசுகிறார். அவருடைய ஹிந்து உரை ஹரிவன்ஷ் ராய் பச்சனை அப்படியே ஒத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ, ஆராத்யா அவரது பள்ளியில் நடத்திய ஆன்லைன் ஹிந்தி பேச்சுப் போட்டியில் இருந்து எடுக்கப்பட்டது. வீடியோவில் எந்தவொரு மொழியையும் கற்றுக் கொள்ள கவிதை எவ்வாறு பெரும் உதவியாக் இருக்கும் என்பதை இந்தியில் விளக்கிப் பேசுவார் ஆராத்யா. அதில் ஆராத்யா பேசும் விதம், அவர் மொழியை அறிமுகப்படுத்தும் விதம் ஆகியவை அனைவரையும் ஈர்த்தது.
ஆராத்யாவின் வைரல் வீடியோவை பலரும் பகிர்ந்தனர். இதை பாராட்டி கமெண்ட்களும் குவிந்தன. அதில் ஒருவர் " ஆராத்யாவிற்கு இந்த திறமை அவரது இரத்தத்தில் உள்ளது. ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சனின் நம்பிக்கைமிகுந்த பேசும் திறன், ஹிந்தியில் சரளமாக பேசுவது மற்றும் அவரது தாத்தா பாட்டியின் மதிப்புகள் ஆராத்யாவிடன் ததும்புகிறது. அவள் ஒரு அற்புதமான மனிதனாக வளரப் போகிறாள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், ’அற்புதமானப் பேச்சு. அருமையான சிரிப்பு. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.” என்றும் கமெண்ட் செய்திருந்தார்.
ஆராத்யா தனது பள்ளியின் குடியரசு தின விழாவிற்கு "சாரே ஜஹான் சே அச்சா" மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய "வந்தே மாதரம்" பாடலைப் பாடிய மற்றொரு வீடியோ பரவியது. வீடியோவில் ஆராத்யா வெள்ளை சல்வார்-கமீஸ் மற்றும் ஆரஞ்சு துப்பட்டா அணிந்திருந்தார். அவர் இந்தியாவின் தேசியக் கொடியின் பின்னணியில் நின்று பாடலைப் பாடியுள்ளார்.
ரசிகர்கள் ஆராத்யாவின் திறமையை பாராட்டி வீடியோவை பகர்ந்துள்ள ஒரு பதிவிற்கு, அபிஷேக் பச்சன் இரு கைக்கூப்பிய வணக்கம் அல்லது நன்றியை தெவிக்கும் விதமான இமோஜியை பதிவு செய்து கமெண்ட் செய்துள்ளார்.