ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஜோடி மீது பாலிவுட்டுக்கும் சரி பப்ளிக்குக்கும் சரி இதுவரை அபிமானம் சற்றும் குறையவில்லை. அதனால் தான் அவர்களைப் பற்றிய செய்தி என்றால் அது இன்றும் டாக் ஆஃபி தி டின்சல் டவுன் ஆகிவிடுகிறது.


அபிஷேக் பச்சன் அண்மையில் தாஸ்வி என்ற படத்தில் நடித்தார். அதில் அவர் கங்காராம் சவுத்ரி என்ற கல்வியறிவற்ற அரசியல்வாதியாக நடித்திருந்தார். கதைப்படி சிறைக்குச் சென்ற பின்னரே அபிஷேக் பச்சன் (கங்காராம் சவுத்ரி) உயர்நிலைக் கல்வியைக் கற்கிறார். இது பற்றி அவர் கூறியபோது, அவரிடம் அவருடைய நிஜவாழ்வு கல்வி குறித்தும், மகள் ஆராத்யாவுக்கு கல்வியில் ஏதாவது உதவுவாரா என்பது குறித்தும் ட்விட்டர் ஸ்பேசஸ் கேள்வி எழுப்பப்படுகிறது.


அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:


நான் வெளிநாடு சென்று படித்தேன். ஆனால், இன்றுவரை என் மகளுக்கு நான் பள்ளிக்கூட பாடங்களில் உதவி செய்ததில்லை. என் மகள் ஆராத்யாவுக்கு இந்த உலகத்தில் பெஸ்ட் டீச்சர் இருக்கிறார். அவர்தான் என் மனைவி ஐஸ்வர்யா.அதனால் நான் பள்ளிக்கூட பாடங்களில் தலையிடுவதில்லை. நான் சொல்லிக்கொடுத்தால் ஒரு ஆசிரியர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்குத்தான் உதாரணமாக இருப்பேன். அதனால் ஒரு ஆசிரியர் என்பவர் எப்படி இருப்பார் என்ற ஆராத்யாவின் புரிதலில் குறுக்கிட நான் விரும்பவில்லை. கல்வித்துறை வீட்டில் ஐஸ்வர்யா கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்தான் எங்கள் வீட்டு டீச்சரம்மா.


இவ்வாறு அபிஷேக் பச்சன் ட்விட்டராட்டிகளுக்கு கூறினார். 


அதேபோல் தனது இளமைக்காலத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். நான் சிறு வயதாக இருந்தபோது என் தந்தை தான் எனக்கு கணக்குப் பாடங்களை சொல்லித் தருவார். அதற்காக அப்பா எனக்கு நிறைய நேரம் செலவிட்டிருக்கிரார். அப்பா கணக்கில் புலி. அப்பா அறிவியல் பாடம் படித்தவர். அதனால் அவர் ஒரு நல்ல டீச்சராகவும் இருந்தார். ஆனால் வயதாக ஆக பெற்றோர் நல்ல டீச்சராக இருக்க முடியாமல் போய்விடுகிறது. ஏன் தெரியுமா? நமக்கு பெற்றோர் மீது ஒரு பயம் வந்துவிடுவதே அதற்குக் காரணம்.




என் வாழ்வில் எனக்கு நிறைய நல்ல டீச்சர்கள் கிடைத்திருக்கின்றனர். சொல்லப் போனால் என்னை நடிக்க வைத்த ஒவ்வொரு இயக்குநரும் எனக்கொரு ஆசான் தான். அதனால் நம் வாழ்நாள் முழுவதும் நமக்கு யாராவது ஆசிரியர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள்.


அண்மையில் வெளியான தாஸ்வி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற அது குறித்து அமிதாப் பச்சன் "படத்திற்குப் படம் அபிஷேக் பச்சன் ஆச்சர்யப்பட வைக்கிறார். அவர் கதைகளைத் தேர்வு செய்யும் விதமும், வெவ்வேறு கதாபாத்திரங்களாக மாறும் விதமும் வியக்கவைக்கிறது. அபிஷேக் ஒரு வெற்றியாளர். அவர் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்" என்று கூறியிருந்தார்.