இந்த ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் வித்தியாசமான உடையில் வலம் வந்து பேசுபொருளாகியுள்ளார்.


பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா,  கடந்த மே 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.


உலக நாடுகளின் பல்வேறு திரைப்பிரபலங்களும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில், இந்த ஆண்டு 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. வரும் மே 28ஆம் தேதி வரை இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற உள்ளது.


இந்நிலையில், இந்த ஆண்டு இயக்குநர் அனுராக் காஷ்ய்ப்பின் கென்னடி திரைப்படம், 1990ஆம் ஆண்டு வெளிவந்த இஷானோ, ராகுல் ராய் நடித்த ஆக்ரா, குறும்படமான நெஹெமிச் ஆகிய படங்கள் இந்த ஆண்டு இந்திய சார்பில் திரையிடப்படுகின்றன.


மற்றொருபுறம் கேன்ஸ் ரெட் கார்ப்பெட் நிகழ்வில் இந்தியப் பிரபலங்கள் கலந்துகொண்டு தொடர்ந்து இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் வருகின்றனர்.


அந்த வகையில் இந்தியா சார்பில் பலமுறை கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த அண்டு வித்தியாசமான உடையில் கேன்ஸ் விழாவில் தோன்றி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


மாயத்தோற்றம் கொண்ட பளபளக்கும் வெள்ளிநிற உடை அணிந்து ரெட் கார்ப்பெட்டில் பூனை நடை போட்டு வந்த  நடிகை ஐஸ்வர்யா ராயின் இந்த உடை நெட்டிசன்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.






19ஆவது முறையாக ஐஸ்வர்யா ராய் கான் திரைப்பட விழாவில் ரெட் கார்ப்பெட்டில் நடந்துள்ள நிலையில், பெரும்பாலும் ஐஸ்வர்யா ராய் தன் ரெட் கார்ப்பெட் லுக்குக்காக ட்ரோல்களையே சந்தித்துள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டும் ஐஸ்வர்யா ராய் ஒருபுறம் பாராட்டுகளையும் மறுபுறம் ட்ரோல்களையும் பெற்று வருகிறார். 


அதன் உச்சக்கட்டமாக ஐஸ்வர்யா ராய் பரிட்டோ ரோல் , ஷவர்மா ரோலின் foil கவர் போன்ற உடையில் இருந்து எட்டிப் பார்க்கிறார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.


இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் நடிகைகள் மிருணாள் தாக்கூர், சாரா அலி கான், ஏமி ஜாக்சன், ஈஷா குப்தா, மனுஷி சில்லர் ஆகியோர் முன்னதாகக் கலந்துகொண்டு ரெட் கார்ப்பெட்டில் நடந்தனர். இவர்களது ஃபோட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் லைக்ஸ் அள்ளின.