நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு இன்று 49 வயதாகிறது, ஆனால் இந்த எவர்க்ரீன் அழகி உலகின் பல புகழ்களுக்குச் சொந்தக்காரர். 1998 ஆம் ஆண்டு பாலிவுட்டில் தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா, உலக அழகிப் பட்டம் வென்றதன் மூலம் உலகளாவிய அடையாளமாக மாறினார்.ஐஸ்வர்யா ராய் குரிந்தர் சாதாவின் பிரைட் அண்ட் ப்ரெஜுடிஸ் மற்றும் ஜக் முந்த்ராவின் ப்ரோவோக்ட் உட்பட பல ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.


ஐஸ்வர்யா ராய் பற்றி அறியப்படாத 10 விஷயங்கள்: 


-ஐஸ்வர்யா 1994ம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றார். அவரது இரண்டு தசாப்த கால சினிமா வாழ்க்கையில், 45க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.


-ஐஸ்வர்யா எப்போது முதல்முறையாக அறிமுகமானார் என்று உங்களால் யூகிக்க முடியுமா? இல்லை நீங்கள் நினைப்பதுபோல இந்திப்படம் எதுவும் இல்லை. ஐஸ்வர்யா தான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தனது முதல் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தார். அதுதான் அவரது அறிமுகம். அந்த விளம்பரம் கேம்லின் பென்சிலுக்கானது.


- ஐஸ்வர்யா மருத்துவப்படிப்பு படிக்க  விரும்பினார். பின்னர், அது ஆர்கிடெக்சர் தொடர்பான ஆர்வமாக மாறியது. இதை அடுத்து ரச்சனா சன்சாத் அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்சரில் சேர்ந்தார். இருப்பினும், மாடலிங் வாய்ப்பைத் தொடர அவர் தனது படிப்பை விட்டுவிட்டார்.


-1993 இன் பசுமையான பெப்சி விளம்பரம் நினைவிருக்கிறதா? 1994 இல் உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு முன்பு, ஐஸ்வர்யா மஹிமா சவுத்ரி மற்றும் அமீர் கானுடன் அந்த பெப்சி விளம்பரத்தில் நடித்தார்.


-அவரது முதல் சினிமா 1997ல் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளியான இருவர். இதை அடுத்து அதே ஆண்டு அவர் ’அவுர் பியார் ஹோ கயா’ இந்தி திரைப்படத்தில் நடிகர் பாபி தியோலுடன் நடித்தார். 



-2003ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி உறுப்பினரான முதல் இந்திய நடிகை ஐஸ்வர்யா ஆவார். நெதர்லாந்தில் உள்ள கியூகென்ஹோஃப் தோட்டத்தில் அவர் பெயரில் டூலிப் மலர்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?






- ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட முதல் இந்தியர் மற்றும் மேடம் துசாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் முக்கியப்புள்ளியின் சிலை இவருடையதுதான். 



-இதுதவிர அவர் 2009 இல் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2012ம் ஆண்டில் பிரெஞ்சு அரசாங்கத்தால் ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ் விருதையும் பெற்றார்.



-அவருக்கு பொருட்களை வாங்குவது குறித்து பெரிதும் ஆர்வம் இருந்ததில்லை என்றாலும் அவருக்கு எழுதப்படும் கடிதங்களைச் சேகரித்து வைப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். 


ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா ராய்