வசீகரமான அழகாலும், திறமையான நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை உலகெங்கிலும் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய்யை 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நந்தினியாக ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்து விட்டார்.


அனைவரின் பாராட்டையும் அள்ளிக் குவித்த ஐஸ்வர்யா ராய், இனி தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களில் பார்க்கலாம் என்ற தகவல் வெளியானது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.


 



உலக அழகி ஐஸ்வர்யா ராய் பல ஆண்டு காலமாக எல் ஓரியல் (L’ Oreal) பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார். சர்வதேச புகழ்பெற்ற இந்த நிறுவனமானது தனது விளம்பர தூதுவராக மிக முக்கியமான பிரபலமான செலிபிரிட்டிகளை மட்டுமே நியமித்து வருகிறது. அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் மிக முக்கியமான பிராண்ட் அம்பாசிடர். 


சில தினங்களுக்கு முன்னர் பாரிஸ் ஃபேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஐஸ்வர்யா ராய் செய்த ராம்ப் வாக் வீடியோ சோசியல் மேடையில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்ற எல் ஓரியல் (L’ Oreal) நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். இந்த நிகழ்வில் அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த், கௌஹர் கான், பாத்திமா சனா ஷேக் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 


இந்த விழாவில் கருப்பு நிற கவுனில் சில்வர் டீடெய்லிங் கொண்ட ஓவர் கோட்டுடன் அசத்தலாக கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான ஒரு அறிக்கையை தெரிவித்து இருந்தார். "இந்த நிகழ்வுக்கு வந்ததற்கு நன்றி கூறுகிறேன். பெண்களுக்கு எதிரான தெருத் துன்புறுத்தல் (Street Harassment) என்ற ஒரு முக்கியப் பிரச்சினையை எடுத்துரைக்கும் ஒரு நிகழ்வு இது. இதன் மூலம் நான் தெரிவிக்க விரும்புவது இது இரு பாலினருக்கும் பொருந்தும் என்பதே. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை  உணர வேண்டும். 


எல் ஓரியல் பாரிஸ் ரைட் டு பி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது, இது அனைத்து வகையான துன்புறுத்தலையும் முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் தெரு துன்புறுத்தலுக்கு எதிராக அவர்கள் ஸ்டாண்ட் அப் திட்டத்தை தொங்கியுள்ளனர்" என்ற தனது அழுத்தமான கருத்தை பதிய வைத்தார். 


திரையில் நடிப்பதில் மட்டுமின்றி சமூகம் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர் ஐஸ்வர்யா ராய் என்பது அவரின் இந்த கருத்தின் மூலம் வெளிப்படுகிறது. அவரின் இந்த கருத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.