ஆன்லைன் கால் டாக்சி என்பது தற்காலத்தில் பெரிதும் வளர்ந்துவிட்ட ஒரு தொழிலாக இருக்கிறது. மக்களும் வெளியில் சென்று ஆட்டோவோ, காரோ பிடிப்பிதற்கு பதில் இதனை தேர்வு செய்ய பல காரணங்கள் உண்டு. நம்மிடம் வழி கேட்டு திணறாமல் நேரடியாக வீட்டிற்கு வந்து நிற்பதும், நேரடியாக நாம் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு சென்று விடுவதும் வசதியான ஒன்றுதான். அதுமட்டுமின்றி ஓட்டுனரோ பயணியோ இருவருக்கும் பேரம் பேச வேண்டிய தலைவலி இல்லை. எனவே பயன்பாடு அதிகரித்துவிட்ட இந்த ஆன்லைன் கேப் சேவைகளை இந்தியாவில் பெரிதளவில் செய்து வருவது ஓலாவும் உபெர் தான். கேரள அரசு அவர்களுக்கென தனி ஒரு டாக்சி ஆப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






அண்ணா & அங்கிள்


பொதுவாகவே இது போன்ற ஆட்டோ, கார் ஓட்டுனர்களை பயணிகள் மரியாதை நிமித்தமாக அண்ணா அல்லது அங்கிள் என்று கூப்பிடுவது வழக்கம். ஆனால் ஒரு உபெர் ஓட்டுநர் அப்படி தன்னை அழைப்பது பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். நகைச்சுவையாக அதனை வரும் பயணிகளிடம் கூறுவதற்கு ஒரு வழியையும் வைத்திருக்கிறார். 






ஸ்டிக்கர் ஒட்டிய ஓட்டுநர்


முன்பக்க இருக்கையின் ஹெட்ரெஸ்டின் பின்புறத்தில், "என்னை பையா(இந்தியில் அண்ணா) & அங்கிள் என்று அழைக்காதீர்கள்" என்று டிரைவர் மிகத் தெளிவாக எழுதியுள்ளார். ஒரு ட்விட்டர் பயனர் இந்த யோசனையை மக்கள் பார்வைக்காக அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.






உபேர் நிறுவனம் கமெண்ட்


இதனை கண்டவர்கள் சிரிப்பு ஸ்மைலிகளை உதிர்த்தது மட்டுமின்றி, வேறு எப்படியெல்லாம் அழைக்கலாம் என்ற யோசனைகளை வழங்கினர். இதற்கு கீழே கமெண்ட் செய்த உபேர் நிறுவனம், "ஓட்டுநர் பெயர் தெரியவில்லை என்றால் எங்கள் ஆப்பில் பார்த்துக் கொள்ளுங்கள்", என்று கூறியது.