நடிகர் விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்  ஐஸ்வர்யா லக்ஷ்மி. அப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் ஐஸ்வர்யா லக்ஷ்மியும் பெரிய அளவில் வெளியில் தெரியாமல் போனார். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அவரின் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இது வரையில் அவர் நடித்த படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் பூங்குழலி என்ற கதாபாத்திரமாக 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமடைந்தார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. 


 



 


தற்போது பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஐஸ்வர்யா லட்சுமி மலையாள திரையுலகத்தில் மிகவும் பிரபலம். மாயநதி, வரதன் போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அங்கும் முன்னணி நடிகையானார். விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 


 






 


நேற்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்ட ஒரு தகவல்   'கைதி ', 'மாஸ்டர்' படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸுக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கும் இடையில் காதல் என்பது.  இந்த தகவல் மளமளவென காட்டுத்தீ போல பரவியது.


 



 


இந்த போட்டோவை சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஐஸ்வர்யா லட்சுமி இந்த வதந்தி குறித்து விளக்கமளித்துள்ளார். "என்னுடைய லாஸ்ட் போஸ்ட் இந்த அளவிற்கு பெரிதாகும் என நான் நினைக்கவேயில்லை. இருவரும் சந்தித்த போது ஒரு போட்டோ எடுத்துக்கொண்டோம். அதை போஸ்ட் செய்தேன் அவ்வளவு தான். நாங்கள் இருவரும் நண்பர்கள். நேற்றில் இருந்து மெசேஜ் மூலமாக தொடர்பு கொண்ட அர்ஜுன் தாஸ் ரசிகர்கள் அனைவருக்கும் இதை நம்புங்கள். அவர் உங்களுடையவர் !!! " என போஸ்ட் செய்து இருந்தார். 


இதன் மூலம் மிகவும் குழம்பி போய் இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் தெளிவு கிடைத்து இருக்கும்.