டிராகன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படம் இப்படம் 3 நாட்களில் 50 கோடி வசூலித்துள்ளது. இரண்டு படங்களை இயக்கி இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கோலிவுட்டின் அடுத்த வளர்ந்து வரும் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். தமிழ் மட்டுமில்லாமல் கேரளா , ஆந்திராவிலும் இந்த படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. 

டிராகன் பட வசூல்

தமிழ் நாட்டில் டிராகன் படம் 3 நாளில் 24.9 கோடியும் , ஆந்திரா மற்றும் தெல்ங்கானாவில் ரூ 6.25 கோடியும் கேரளா, கர்னாடகா மற்றும் வட மாநிலங்களில் 6.25 கோடியும் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் இப்படம்14.7 கோடி வசூலித்துள்ளது. 

தயாரிப்பாளர் காட்டிய சாமர்த்தியம்

பிரதீப் ரங்கநாதன் முன்னதாக இயக்கி நடித்த லவ் டுடே படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்தது. தற்போது டிராகன் படத்தை இந்த நிறுவனமே தயாரித்துள்ளது.  5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் 100 கோடி வசூலித்தது. வளர்ந்து வரும் மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும்போது பிரதீப் ரங்கநாதன் நெக்ஸ் லெவலில் இருக்கிறார்.

டிராகன் படம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றி அடையும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் முன்பே கணித்திருக்கிறது. அதனால் இந்த படத்தை தயாரித்தது மட்டுமில்லாமல் தானே இந்த படத்தை தமிழ்நாட்டில் விநியோகமும் செய்தது. டிராகன் படத்தை 15 முதல் 20 கோடி கொடுத்து வாங்க வரை விநியோகஸ்தர்கள் முன்வந்தும் படத்தை தானே வெளியிட ஏ.ஜி.எஸ் முடிவு செய்தது. தமிழ்நாட்டில் 22 கோடி படம் வசூலித்தாலே போட்ட பணத்தை திருப்பி எடுத்துவிடலாம் என்கிற நிலை உள்ளது. இதுவே படத்தை வேறு ஒருவர் விநியோகம் செய்திருந்தால் 30 முதல் 35 கோடி வரை வசூல் ஈட்டினா பிரேக் ஈவன் கிடைத்திருக்கும். 

பிரதீப் மற்றும் படத்தின் இயக்குநர் அஸ்வத் மீது தயாரிப்பாளர்களுக்கு இருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. டிராகன் திரைப்படம் வெறூம் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 24.9  கோடி வசூலித்துள்ளது. இதற்கு மேல் வரும் வசூல் எல்லாம் ஏஜிஎஸ் க்கு லாபமே. இது தவிர்த்து படத்தின் சாட்டலைட் மற்றும் ஓடிடி விற்பனையும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.