'அக்னி சிறகுகள்' மல்டி ஸ்டாரர் படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் கதாநாயகர்களாக களமிறங்க, ஷாலினி பாண்டே மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும்,  பாலிவுட் நடிகை ரைமா சென் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். 




மூடர் கூடம் புகழ் நவீன் இயக்கும் 'அக்னி சிறகுகள்' படத்தின் முதல் ஷெட்யூல் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. இரண்டாவது ஷெட்யூல் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்தது. அதைத் தொடர்ந்து கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டியில் சில அதிரடி காட்சிகள் படமாக்கப்பட்டன. கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 






'அக்னி சிறகுகள்' படத்தின் இயக்குநர் நவீனும் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வருகிற மே 27 ம் தேதி டீசர் வெளியாகும் என உறுதி செய்துள்ளார். இந்த படம் கே.ஏ.பாச்சா ஒளிப்பதிவில், நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். டி.சிவா இதை தயாரிக்க, இந்தப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 






இப்படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாகவும், அருண் விஜய் ரஞ்ஜித் எனும் கதாபாத்திரத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளனர். சமீபத்தில், தயாரிப்பாளர்கள் கேரக்டர் போஸ்டர்களை வெளியிட்டனர். அதில் சீனுவாக விஜய் ஆண்டனி நடிக்கிறார், அதில் விஜியாக அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். ஸ்மிதா என்ற தைரியமான மற்றும் வலுவான கேரக்டரில் ரைமா சென் நடிக்கிறார்.


மேலும், இந்த படத்தில் ஜெகபதி பாபு, நாசர், ஜே சதீஷ் குமார் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண