நடிகர் ஜெயம் ரவி, பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் படம் இன்று (மார்ச்.10) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இந்தப் படத்தை கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். பூலோகம் படத்துக்குக்குப் பிறகு ஜெயம்ரவி - கல்யாண் கிருஷ்ணன் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
சாம் சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சென்ற மார்ச் 5ஆம் தேதி அகிலன் பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடல் வழி வாணிபம், சுங்கத்துறை சார்ந்து நிகழும் அரசியலைப் பேசும் ஆக்ஷன் காட்சிகளுடன் இந்த ட்ரெய்லர் அமைந்திருந்த நிலையில், இந்தப் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள அகிலன் படத்தின் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள், அகிலன் உண்மையில் இந்தியப் பெருங்கடலின் ராஜாவா என்பவற்றை ட்விட்டர் பதிவுகளின் மூலம் தெரிந்து கொள்வோம்.