Agilan Trailer: 'கடல் வழி வர்த்தகத்தில் ஆட்டம் காட்டும் அகிலன்..' மாஸாக ரிலீசான ட்ரெயிலர்..! ஜெயம் ரவிக்கு ஜெயம் தருமா..?

தமிழில் துறைமுகங்கள், கடல் சார்ந்த கதைகளை மையமாகவைத்து வெகு சில படங்களே வந்துள்ள நிலையில், அகிலன் ட்ரெய்லர் சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் அமைந்துள்ளது.

Continues below advertisement

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் அகிலன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்துள்ளது. பூலோகம் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி - இயக்குநர் என்.கல்யாண் கிருஷ்ணன் இரண்டாவது முறையாக இணையும் படம் 'அகிலன்'. பிரியா பவானி சங்கர், ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

Continues below advertisement

ஹார்பர் ஊழியர்:

முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடல் துரோகம் வெளியாகி கவனமீர்த்தது. வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீசாக உள்ள நிலையில், பட்க்குழுவினர் ப்ரொமோஷன் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னதாக அகிலன் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி கவனமீர்த்துள்ளது. துறைமுகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்  படத்தில் ஜெயம் ரவி ஹார்பரில் வேலை செய்பவராகத் தோன்றும் நிலையில், கடல் வழி வாணிபம் அதனைச் சுற்றி நடக்கும் அரசியல் ஆகியவற்றைப் பேசும் வகையில் அமைந்து இந்தப் படத்தின் ட்ரெய்லர் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.

 

தமிழில் துறைமுகங்கள், கடல் சார்ந்த கதைகளை மையமாகவைத்து வெகு சில படங்களே வந்துள்ள நிலையில், தற்போது வெளிவந்துள்ள அகிலன் படத்தின் ட்ரெயலர் சுவாரஸ்யமான புதிய களத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola