Ajith Receives Gift | 'தல' போல வருமா.. அஜித்தின் அன்பில் கரைந்த ட்ரைவர்! அள்ளிக்கொடுத்த அன்புப் பரிசுகள்..!

 அஜித் தன்னிடம் அன்போடு பழகும் விதத்தை கண்டு நெகிழ்ந்துபோன அலெக்ஸ் என்ற அந்த ஓட்டுநர், அஜித்திற்கு சில பரிசுகளை வழங்கியுள்ளார்.

Continues below advertisement

’தல’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித் நடிப்பில் , ஹெச்.வினோத் இயக்கத்தில் , போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தின் சில ஸ்டண்ட் மற்றும் கார் சேஸிங் காட்சிகள் சமீபத்தில் ரஷ்யாவில் படமாக்கப்பட்டது. படக்குழுவினர் வலிமை படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படம் வருகிற தீபாவளி பண்டிகை அன்று திரையடங்கங்களில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்ற நடிகர் அஜித் மட்டும் அங்கேயே தங்கிவிட்டார். அஜித் ரஷ்யாவின் கொலம்னா சாலைகளில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தனது இருசக்கர வாகனத்திலே பயணிக்க திட்டமிட்டிருந்தார். அதேபோல பயணத்திற்கு தயார் நிலையில் இருந்த அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதும் குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

அஜித்துக்கு அளிக்கப்பட்ட அன்புப்பரிசு - நன்றி : PinkVilla

 

 

அஜித்துக்கு அளிக்கப்பட்ட அன்புப்பரிசு - நன்றி : PinkVilla


இந்நிலையில் ரஷ்யாவின் கார் ஓட்டுநர் ஒருவர் அஜித்திற்கு அன்பு பரிசுகளை வழங்கியுள்ளார். அந்த புகைப்படங்களும்  தற்போது வெளியாகியுள்ளன. ரஷ்யாவில் வலிமை ஷூட்டிங் நடைபெற்ற சமயங்களில், அங்குள்ள டெக்னீஷியன்ஸ் மற்றும் உள்ளூர் கலைஞர்களை தினமும் தனது வாகனத்தில் அலெக்ஸ் என்ற ஓட்டுநர் அழைத்துச்செல்வது வழக்கமாம். பின்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீட்டிற்கு இறக்கி விடுவதுமான வேலைகளையும் செய்துள்ளார்.

அப்போது அவருக்கு அஜித்திடம் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  அஜித் தன்னிடம் அன்போடு பழகும் விதத்தை கண்டு நெகிழ்ந்து போன அலெக்ஸ் என்ற அந்த ஓட்டுநர் அஜித்திற்கு சில பரிசுகளை வழங்கியுள்ளார். அது தற்போது தீயாக பரவி வருகிறது. “கொலம்னா உங்களை நேசிக்கிறது, நீங்கள் ஒரு சிறந்த மனிதன்” என ஆங்கிலத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட இரண்டு டி-ஷர்ட்டுகள், சில மில்க் சாக்லெட்டுகள் மற்றும் அஜித்தின் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு காபி கப் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். அந்த பரிகளை அஜித்திடம் கொடுக்கும்பொழுது “இங்குள்ள அனைவரும் உங்கள நேசிக்கிறாங்க, நீங்க நான் சந்தித்த மனிதர்கள்லையே மிக சிறந்த மனிதர்“ என கூறினாராம். 

 

நன்றி : PinkVilla

 

 

நன்றி : PinkVilla
நன்றி : PinkVilla

அஜித்குமார்  துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங், கார் ரேஸ், பைக் ரேஸ் என்று பல துறைகளில் திறமை வாய்ந்தவராகவும், நிபுணத்துவம் பெற்றவராகவும் வலம் வருபவர். நடிகராவதற்கு முன்பு அஜித்குமார் பைக் ரேஸராக வேண்டும் என்றே விரும்பினார். இது எல்லாவற்றையும் தாண்டி ரசிகர்கள் மீது  மரியாதையும் பேரன்பும் கொண்டவர். நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர் என பலர் கூற கேட்டிருப்போம். ஆனால் அவை எல்லாம் தமிழகத்திற்குள்தான் நிகழ்ந்திருக்கின்றன.

வெளிநாட்டவர் ஒருவர் நடிகர் ஒருவரை நல்ல மனிதர் என பாராட்டி பரிசளித்திருப்பது இதுவே முதல் முறை. நிச்சயம் இந்த சம்பவம் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Continues below advertisement