இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமந்தா- ஜீவா ஆகியோரின் நடிப்பில் உருவான ‘நீதானே என் பொன்வசந்தம் படத்தில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். அந்தப் படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவருக்கு இருந்த நகைச்சுவை கதாபாத்திரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து வீரம், ஜில்லா, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் போன்ற படத்திலும் நடித்தார்.
அதேபோல அமேசானில் வெளியான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து தனது உடல் எடையையும் குறைத்து சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக மாறினார் வித்யுலேகா. தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் வெளியுடத் தொடங்கினார்.
தொடர்ந்து வித்யுலேகாவுக்கும், சஞ்சய் என்பவருக்கும் சென்னையில் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற அந்த திருமண நிகழ்வில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். தனது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அப்லோட் செய்த வித்யுலேகாவிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து இருவரும் திருமணத்திற்காக மாலத்தீவிற்கு தேனிலவுக்கு சென்றனர். வழக்கமாக பல்வேறு செலிப்ரிட்டிகளும் மாலத்தீவுக்குச் சென்றால் தண்ணீருக்கு நடுவே மிதக்கும் தட்டில் விதவிதமான உணவுப் பொருட்கள் அடங்கிய புகைப்படத்தை வெளியிடுவார்கள். அதே டெய்லர், அதே வாடகை என்பதுபோல அதே பாதையைப் பின்பற்றினார் வித்யுலேகா. ஆனால் அவர் சற்று வித்தியாசமான கேப்ஷனை பதிவிட்டதுதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. “நிஜமாகவே இன்ஸ்டாகிராமிற்காகத்தான் இந்த புகைப்படத்தை எடுத்தேன். அப்படி உணவு சாப்பிடுவது மிகவும் அசௌகரியமாக இருந்தது” என்றும் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ‘மால்தீவ்சை பக்கெட் லிஸ்ட்டில் வைத்திருந்த பலரும் அட இவ்வளவுதானா... இதற்குதான் பலரும் அவ்வளவு ஹைப் கொடுத்தார்களா? என கமெண்ட்ஸ்களைப் போட்டனர்.
மால்தீவ்ஸ் போட்டோ சீரிசில் அடுத்ததாக, அலைகளுக்கு நடுவே மஞ்சள் நிற பிகினி அணிந்துக் கொண்டு கூலிங் கிளாசுடன் கூலாக போஸ் கொடுத்த போட்டோவை அப்லோட் செய்தார். அதற்கு பல்வேறு தரப்பினரும் பாசிடிவ் கமெண்ட்களை இட்டாலும் சிலர் நெகட்டிவ் கமெண்ட்களையும் போட்டனர். இன்னும் சிலர் இன்னும் தீவிரமாக போய் வித்யுலேகாவிற்கு டைரக்ட் மெசெஜ் அனுப்பியிருக்கிறார்கள். அதுக்குறித்த தன் கண்டனங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார் வித்யுலேகா.
என்னுடைய பிகினி உடை போட்டோவை நிறைய பேர் ட்ரோல் செய்த நிலையில், எப்போது நான் விவாகரத்து பெறப்போகிறேன் என்பது போன்ற மெசேஜ்கள் வந்தன. ஸ்விம்சூட் உடைக்காகத்தான் அவையெல்லாமா? 1920 களிலிருந்து வெளியேறி 2021க்கு வாருங்கள் அங்கிள்ஸ், ஆண்ட்டீஸ். நெகட்டிவ் கமெண்ட்கள் என்பது ஒரு பிரச்சினையில்லை. ஆனால் எது பிரச்சினையென்றால் ஒரு சமூகமாக நாம் எப்படி யோசிக்கிறோம் என்பதுதான்’ என பதிவிட்டுள்ளார்.