இயக்குநர் இமயம் பாரதிராஜாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். 






ஏற்கனவே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அப்போது அவர் தனது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். 


Also Read|Naane Varuven Release LIVE: முதல் பாதி சூப்பர்...இரண்டாம் பாதி சுமார்...ஆனாலும் “நானே வருவேன்” மாஸ்...!


இதனையடுத்து செப்டம்பர் 9 ஆம் தேதி  மூன்று வார சிசிக்சைக்கு பின்னர் இயக்குநர் பாரதிராஜா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். அதற்கு அடுத்த நாள் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார். அவருடன் கவிஞர் வைரமுத்து, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 






ஆனால் அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் சிறுநீர குழாயில் ஏற்பட்ட அடைப்பு  காரணமாக பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.