ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அடியே’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


அடியே திரைப்படம்:


’ஏன்டா தலையில எண்ண வைக்கல’, ‘திட்டம் இரண்டு’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடையே கவனம்  ஈர்த்த விக்னேஷ் கார்த்திக் ‘அடியே’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் உடன் கவுரி கிஷன் நாயகியாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகர் இசையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


‘ தளபதி விஜய் நடித்து ‘யோகன் அத்தியாயம் ஒன்று’ படத்தின் 150-வது வெற்றி விழாவுக்கு இந்திய பிரதமர் விஜயகாந்த் செல்கிறார்’ என்று தொடங்குகிறது ‘அடியே’ திரைப்பட டிரெய்லர். இந்த வசனமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவே வீடியோவை பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது.  ’மெட்ராஸ் பருவ பனிப்பொழிவு இயல்பை விட முன்னாதவே தொடங்கி உள்ளது’ என்ற அடுத்து வரும் வசனமும் சுவராஸ்யமானதாக உள்ளது.  ‘ இவருதான் மியூசிக் டைரக்டர் பையில்வான் ரங்கநாதன் 2 ஆஸ்கர் வாங்கிருக்காரு’, ‘கோமாளி படத்துல ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறாரா?’, ‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம், மிஷ்கினின் ‘பொறுக்கி பய சார்’ போன்ற வசனங்களும், ‘மயக்கம் என்ன’, ‘மாநாடு’ பட ரெஃபரன்ஸ் ஏராளமான கதைகள் ட்ரெய்லரில் சொல்லப்பட்டுள்ளது. 


இதற்கு நடுவே காதல், அடுற்கு அடுத்து ட்ரெய்லர் வேறுவிதமாக உருவெடுக்கிறது. ஆல்டர்னேட்டர் நிஜ உலகிற்கு வருகிறார் கதாநாயகன். கதாநாயகன்  பல்வேறு கற்பனைகளுக்குள் வாழ்ந்து அதன் நிஜம் தெரியவரும்போது என்னாகிறது என்பதை நோக்கி கதை நகர்கிறது. 


ட்ரெய்லர் வீடியோவை காண -