விருமன் திரைப்படக் குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் கார்த்தி,அதிதி, ராஜ்கிரண்,சூரி, இயக்குநர் முத்தையா என விருமன் பட குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விருமன் திரைப்படத்தின் கதாநாயகியும் இயக்குநர் ஷங்கரின் மகளுமான அதிதி சங்கர் படம் குறித்தும் படக்குழுவினர்கள் குறித்தும் பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார். 




அதில் "இதுவரை நான் வீட்டை விட்டு வெகு தூரம் சென்றதே இல்லை… பட சூட்டிங்கின் போது வெளியில் தங்கி இருந்தாலும் என் குடும்பத்தை நான் மிஸ் பண்ணவே இல்லை. காரணம், அனைவரும் என்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அவங்க வீட்டு பொண்ணு போல என்னை பார்த்துக் கொண்டார்கள்; மிகவும் பாதுகாப்பாக இருந்தது. மேலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த இயக்குநர் முத்தையாவுக்கு நன்றி தெரிவித்தார் அதிதி.


தன்னை அதிதியிலிருந்து தேன்மொழியாக மாற்றியதற்கும், அதற்காக பல மெனக்கடல்கள் மேற்கொண்டமைக்கும் இயக்குநருக்கு கதாநாயகி அதிதி நன்றி கூறினார். அப்போது ட்ரை சைக்கிள் ஓட்டியதாகட்டும், கோலம் போட வைத்தது என பல புதிய விஷயங்களை கற்றுக் கொண்டதாகக் கூறினார் அதிதி.


மேலும் நடிகர் கார்த்தி சார் எனது பக்கத்து வீட்டுக்காரர். அவரை தினமும் பார்த்து வணக்கம் போட்டுவிட்டு, தற்போது அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. தினமும் நான் கார்த்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். தினமும் புதிய புதிய விஷயங்கள் கற்றுக் கொடுத்தார். கார்த்தி சாரும் அவரது திரை வாழ்க்கையை கிராமத்துக் கதையிலிருந்து தான் தொடங்கினார். நானும் அதே போல் கிராமத்து படத்தில் இருந்து என் திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளேன். அவரைப் போலவே நானும் பெரிய இடத்திற்கு செல்வேன் என நம்புகிறேன் என்று கூறினார், நடிகை அதிதி ஷங்கர்.


நடிகை அதிதி ஷங்கரின் முதல் திரைப்படம் விருமன். அதில் அவர் மதுரை வீரன் என்ற ஒரு பாடலும் பாடியுள்ளார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண