2022 ஆம் ஆண்டுக்கான நவராத்திரி கொண்டாட்டம் நேற்றைய தினம் முதல் தொடங்கியது.அதை முன்னிட்டு நடிகை அதிதி சங்கர் நவராத்திரி ஸ்பெஷலாக போட்டோ சூட் நடத்தி வருகிறார். நவராத்திரி முதல் நாளான நேற்று, அதிதி சங்கர் நவராத்திரி முதல் நாள் என்ற டேகுடன் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுருந்தார். அதில் வெள்ளை நிற தாவணி அணிந்து தங்க நகைகள் ஜொலிக்க தேவதை போல் காட்சியளித்தார்.






அதேபோல் நவராத்திரி இரண்டாம் நாளான இன்றும் தனது புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அம்மன் போல சிவப்பு நிற புடவை அணிந்து, நகைகள் ஜொலிக்க தன்னை அலங்கரித்து மிகவும் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.






இந்த போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகை ஆதிதி சங்கர். நவராத்திரி கொண்டாட்டம் முடியும் வரை இனி அதிதி சங்கரிடம் தினம் புத்தம்புதிய போட்டோக்களை நாம் எதிர்பார்க்கலாம்.


தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநரான இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர். மருத்துவப் பட்டதாரியான இவர், நடிப்பின் மீது கொண்ட அதீத காதலால் தனது தந்தையின் உதவியுடன், 2டி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.  இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம்  கிராமத்து கதைக்களத்தில் மையமாய் கொண்டது. இந்த திரைப்படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாகவே மாறி இருந்தார் அதிதி சங்கர்.




நடிப்பு மட்டுமின்றி டான்ஸ் பாட்டு என அனைத்திலும் கை தேர்ந்தவர் இவர். விருமன் திரைப்படத்திலேயே 'மதுர வீரன்' என்ற பாடலை நடிகை ஆதித் சங்கர் பாடியிருந்தார். மேலும் அதே பாடலின் வீடியோவில் இவரது டான்ஸ் மூலம் ரசிகர்களின் மனதைப் பறித்தார்.  நடிப்பு, ஆடல், பாடல் மட்டுமல்லாமல் கடி ஜோக் சொல்வதிலும் வல்லவர் இவர். படப்பிடிப்பின் போது அனைவரிடமும் சுட்டி குழந்தை போல் கடி ஜோக் சொல்வது இவரது வழக்கமாம்.இதை படக்குழுவினரே பல நிகழ்ச்சிகளில் கூறியிருந்தனர்.


அடுத்ததாக இவர் நடிக்க இருக்கும் திரைப்படம் மாவீரன. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைய உள்ளார் நடிகை அதிதி சங்கர்.