தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இயக்குநர் ஷங்கர் தான் எனும் அளவிற்கு பிரபலம் அடைந்தவர். இயக்குநர் சங்கரின் 59 வந்து பிறந்தநாள் இன்று. அவரது பிறந்த நாளையொட்டி அவரது செல்ல மகள் அதிதி ஷங்கர் தனது தந்தையும் இயக்குநருமான ஷங்கருக்கு சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விருமன். இந்த திரைப்படத்தில் இயக்குநர் சங்கரின் மகளான அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.
நடிகை அதிதி ஷங்கர் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு சிறு அழகிய குறி ஒன்றை அத்துடன் பதிவிட்டு இருந்தார்.
அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, என் வாழ்வில் சினிமாவை கொண்டு வந்த மனிதனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.அகில இந்திய திரைப்படங்களின் முன்னோடியே.. நீங்கள் திரையில் கற்பனையை உயிர்ப்பிக்கும் விதம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி. இவை அனைத்தையும் விட பெரிய ஒன்று… ஒவ்வொரு நாளும் முதலில் எனக்கு ஒரு அப்பாவாக நீங்கள் இருப்பது…அதற்கு மிகப்பெரிய நன்றி! லவ் யூ சின்னு…என்று உருக்கமான பதிவு ஒன்றை நடிகை அதிதி சங்கர் தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்தாக பதிவிட்டுள்ளார்.
மேலும் திரைத்துறையினர் பலரும் இயக்குநர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் ராம்சரண், இயக்குநர் அறிவழகன் என இந்த பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது.
ஹாப்பி பர்த்டே டு பிரம்மாண்ட நாயகன் ஷங்கர் சார்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்