நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் , வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது. இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர்கள் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. சமீபத்தில் நடந்த சிவப்பு கம்பள நிகழ்வில் அதிதியிடம், சித்தார்த் உடனான உறவு குறித்து கேட்ட போது அவர் மீடியா செய்தியாளர்களை பார்த்து புன்னகை செய்தார். 

Continues below advertisement


நாளிதழ் ஒன்றிற்கு அதிதி அளித்த பிரத்யேக பேட்டியின் போது, நீங்களும் சித்தார்த்தும் நண்பர்களா? அல்லது நண்பர்களுக்கும் மேலான உறவா என கேட்டப்பட்டது. அதற்கு பதில் அளித்த அதிதி: “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது எனக்கு சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் அவர்கள் எனக்கு மிகவும் முக்கியமானவர்கள். அதை பொது வெளியில் விவரிக்க வேண்டிய தேவை இல்லை. ஒரு சில விஷயங்களை பற்றி பேசுவதற்கு நேரமும், இடமும் இருப்பதாக நான் நினைக்கின்றேன். நான் உள்ளே கோபத்தை வைத்துக் கொண்டோ அல்லது அமைதியாகவோ இல்லை ஆனால் அப்படி இருப்பது நல்லது என நினைக்கின்றேன்”. இவ்வாறு அவர் தெரிவித்தார். நீங்கள் ஒருவருடன் உறவில் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வரும்போது அது உங்களை பாதிக்கிறதா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அதிதி, இல்லை என்று கூறி சிரித்தார். ”மக்கள் அவர்களுக்கு எதை முக்கியம் என்று நினைக்கிறார்களோ அதை செய்கின்றார்கள். நான் எனக்கு எது முக்கியம் என்று நினைகிறேனோ அதைச் செய்கிறேன். உலகம் இப்படித்தான். மக்களை பொதுவாகவே இது போன்ற ஆர்வம் ஆக்கிரமித்து வைத்துள்ளது” என்றார். 


நடிகை அதிதி ராவ் மலையாளம், தெலுங்கு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரஜாபதி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதிதி கடந்த 2017ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதற்காக அவர் சிறந்த அறிமுக நடிகைக்கான SIIMA விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க 


Afghan Beauty Salon: தாலிபான் அரசின் புதிய அடக்குமுறை… ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை!


செந்தில்பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதமா? - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு - அடுத்தது என்ன?