ஐரோப்பிய ரேஸிங் சீரிஸில் முடித்து அஜித் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக ஆதிக் ரவிச்சந்திரன் அதிகாரப்பூர்வ அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளார். 

Continues below advertisement

ஜெண்டில்மேன் டிரைவர் விருது வாங்கிய அஜித் 

குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்குப் பின் பல வருடங்களுக்குப் பின் அஜித் மறுபடியும் கார் ரேஸிங்கில் களமிறங்கி புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அஜித் குமார் ரேஸிங் சார்பாக அவரது குழு துபாயில் நடைபெற்ற மிஷ்லின்24H மற்றும் ஐரோப்பிய நாடுகளில்  நடைபெற்ற  GT4 ரேஸிங் சீரிஸில் கலந்துகொண்டன. இதனால் மோட்டர் ஸ்போர்ட்ஸ் மீது ஆயிரகணக்கான ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. அஜித்தின் அசாத்திய உழைப்பை பாராட்டும் விதமாக அவருக்கு வெனிஸில் 2025 ஆம் ஆண்டுக்கான  சிறந்த ஜெண்டில்மேன் டிரைவர் விருது வழங்கப்பட்டது. 

AK 64

ரேஸ் டிராக்கில் இருந்து திரும்பிய அஜித் குமார் தனது குடும்பத்துடன் தற்போது நேரத்தை செலவிட்டு வருகிறார் அதே நேரம் தனது அடுத்த படத்திற்காகவும் ஆயத்தமாக வருகிறார். குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித் குமார். தூத்துக்குடி துறைமுகத்தை மையப்படுத்தி நடக்கும் கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. குட் பேட் அக்லியைப் போல் இல்லாமல் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருபதி படுத்தும் என படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

படப்பிடிப்பு எப்போது

அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆதிக் ரவிச்சந்திரன் AK64 படத்தைப் பற்றிய அப்டேட் கொடுத்துள்ளார் " படத்தின் திரைக்கதை பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து அஜித் சாருடன் பணியாற்றுவது ரொம்பவும் ஸ்பெஷல். இப்படத்தின் படப்பிடிப்பு 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும்' என ஆதிக் தெரிவித்துள்ளார்

அஜித் சம்பளத்தால் சிக்கல்

AK64 படத்தின் தயாரிப்பாளர் இதுவரை முடிவு செய்யப்படாதது ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. இப்படத்திற்கு அஜித் குமார் 180 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்த தயாரிப்பு நிறுவனமும் இவ்வளவு சம்பளம் தர முன்வரவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன .