ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் குட் பேட் அக்லி படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்
டைட்டில் ஐடியா அஜித் கொடுத்தது
ஆதிக் ரவிச்சந்திரன் கூறுகையில் " நான் ஒரு தீவிரமான அஜித் ரசிகன் என்பதால் எனக்கு நிறைய ஐடியா இருந்தது. படத்தின் டைட்டில் ஐடியா அஜித் சார் கொடுத்தது தான். அஜித் தன்னை எப்போதுமே ஒரு ஸ்டாராக நினைத்ததில்லை. அஜித் சாரின் கதாபாத்திரம் எவ்வளவு மாஸாக இருக்கோ அதே அளவுக்கு எமோஷனலாகவும் இருக்கும் . அந்த எமோஷன்தான் படத்தின் மையப்புள்ளி. இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் கிடையாது. அப்படி பண்ணவும் முடியாது , ஃபேமிலி ஆடியன்ஸ் கனெக்ட் ஆக இடங்கள் இருக்கின்றன. ஒரு தந்தை மகனுக்கு இடையிலான பிணைப்பு இந்த படத்தில் இருக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார்.