கேரள ஸ்டோரி பிரபலம் நடிகை அதா ஷர்மா வேதியியல் தனிம அட்டவணை அதாவது Periodic Table -ஐ எளிதாக நினைவில் வைத்திருக்க வேதியியல் மாணவர்களுக்கு டிப்ஸ் வழங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது. 


பீரியாடிக் டேபிள் பாடல் (Periodic Table):


ஹைட்ரஜன்,லித்தியன், சோடியம், ஹீலியம், உள்ளிட்ட வேதியியல் தனிமங்கள் பண்புகளை உணர்த்தும் அட்டவணையை நினைவில் வைத்துகொள்வது அவ்வளவு எளிதானதல்ல. மாணவர்கள் இதை எளிதில் நினைவில் நிறுத்த கேரளா ஸ்டோரீஸ் திரைப்படத்தில் நடித்த நடிகை, டாம் லெகரர் என்பரின் பாடலை பாடி டிப்ஸ் வங்கியுள்ளார்.






வைரல் பயானி (Viral Bhayani) என்ற இன்ஸ்டாகிரம் பக்கம் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ மாணவர்களுக்கு சிறந்த டிப்ஸ். இதோ!’ என்று கேப்சனோடு பதிவிடப்பட்டிருந்தது. 


இதை பலரும் பாராட்டி, வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். 


அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியர்,. இசையமைப்பாளார், பாடகர், கணிதவியலாளர் Tom Lehrer, இந்த பீரியாடிக் லேபிள் பாடலை பாடியுள்ளார்.


டாம் லெஹ்ரரின் பாடலை காண கீழே உள்ள  இணைப்பை க்ளிக் செய்யவும். 



தி கேரளா ஸ்டோரி’


‘தி கேரளா ஸ்டோரி’ பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பிறகு, அதா ஷர்மா தற்போது பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார். சர்ச்சைக்குரிய கதைக்களத்தைக் கொண்டிருந்தாலும், சுதிப்தோ சென் இயக்கிய இப்படம் சமீபத்தில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.136 கோடியைத் தாண்டியது. இப்படம் வெளியானது முதல் எண்ணற்ற சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. பெரும்பான்மையான முக்கிய விமர்சகர்கள் திரைப்படத்தை உண்மைத் தவறுகளுக்காகவும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மத வேறுபாட்டை தூண்டியதற்காகவும் குற்றம் சாட்டினர்.  மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திரைப்படம் தடைசெய்யப்பட்டது, ஆனால் ஹரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் இந்த படத்துக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தி கேரளா ஸ்டோரி:


கடந்த  மே மாதம் 5 ஆம் தேதி வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம்  வெளியான நாளில் இருந்து பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது. கேரள பெண்கள் தங்களது விருப்பத்திற்கு மாறாக இஸ்லாமியத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவதே தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை. இந்தப் படத்தில் பாலியல் வன்புணர்வு  காட்சிகள் இடம்பெற்றிருபதால் இந்தப் படத்தை தனது குடும்பத்திற்கு குறிப்பாக தனது பாட்டியிடம் காட்டுவதற்குத்தான் மிகவும் பயப்பட்டதாக  அதா ஷர்மா தெரிவித்திருந்தார்.


”எனது குடும்பத்திற்கு  இந்தப் படத்தின் கதை முன்னதாகவே தெரிந்திருந்தது. இருந்தும் படத்தில்  நிறைய நெருடலான காட்சிகள் இருந்ததாலும், பாலியல் வன்புணர்வு காட்சிகள் இவற்றை எல்லாம் பார்த்தபின் அவர் எப்படி ரியாக்ட் செய்வார் என்பதே எனக்கு முக்கியமாக இருந்தது."


ஆனால் அதா ஷர்மாவின் பாட்டி சொன்ன பதில் என்னத் தெரியுமா..? இந்த படம் மிகவும் அறிவுப்பூர்வமான ஒரு படம் என்று தி கேரளா ஸ்டோரி  திரைப்படத்தைப் பாராட்டியுள்ளர் அந்த பாட்டி. பாட்டியின் இந்த ரியாக்‌ஷனை எதிர்பார்க்காத அதாஷர்மா, “என் பாட்டிக்கு வயது 90 ஆகிறது ஆனால் எனது குடும்பத்தில் மிகவும் உறுதியான பெண் என்று ஏற்றுகொள்ளத்தான் வேண்டும். தான் பார்த்ததும் இல்லாமல் தனது மாணவர்களுக்கும் இந்தப் படத்தை காட்டவேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்." என்றார் அதா ஷர்மா.


தி கேரளா ஸ்டோரி படத்திற்கு யு/ஏ சான்றிதல் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், பள்ளி மாணவிகளும் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் அவரது பாட்டி. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தற்போது 200 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அதா ஷர்மா இந்தப் படம் இவ்வளவு பெரிய வசூல்  எடுக்கும் என்று தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார் அதா.


மேலும் இத்தனைக் கோடி மக்கள தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று தான் நினைத்துகூட பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார். ”இந்தப் படத்தில் வரும் அம்மா மகளுக்கு இடயிலான உறவு  எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்தை நான் நடிக்க முடிவு செய்ததற்கும் இதுதான் காரணம். இந்த இரு கதாபாத்திரங்கள்  ரசிகர்கள் மத்தியில் நிச்சய ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என நான் நம்பினேன். ஆனால் இத்தனைக் கோடி மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை” என கூறினார் அதா ஷர்மா.