நடிகை யாஷிகா ஆனந்த் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் யாஷிகா தமிழக மக்களிடையே நன்கு பரீட்சையமானார். இதனைத் தொடர்ந்து ஜாம்பி, சமீபத்தில் வெளியான எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார். கடந்தாண்டு மகாபலிபுரம் சாலையில் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கிய யாஷிகா நடக்க முடியாமல் 3 மாதம் படுத்த படுக்கையாக சிகிச்சைப் பெற்று அதிலிருந்து மீண்ட நிலையில் தொடர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இதனிடையே சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலில் மயூரா மாடலிங் என்ற தனியார் அமைப்பு சார்பில் பேஷன் ஷோ நடைபெற்றது. அதில் யாஷிகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்த புகைப்படங்கள் ட்ரெண்டானது. இது மட்டுமல்லாமல் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம். இதனால் இன்ஸ்டாவில் அவரை 35 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் யாஷிகா டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன் பின்னணியில் தெலுங்கின் முன்னணி இயக்குனரான பூரி ஜகந்நாத்தின் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லிகர் படத்தின் பாடல் ஓடுகிறது. ஏற்கனவே இதே உடையில் இருக்கும் புகைப்படத்தை சில தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தாலும் இந்த வீடியோ யாஷிகா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்