துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தன்னுடைய கிளாமரான தோற்றத்தின் மூலம் ரசிகர்கள் பலரை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
எப்பொழுதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, தான் எடுத்துகொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு அசத்துவார். அவரது புகைப்படங்களை பார்க்கவே இங்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்தநிலையில் தற்போது, யாஷிகா ஆனந்த் சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் மற்றும் அதற்கான படுகவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த படுகவர்ச்சியான வீடியோ இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.
முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக யாஷிகா தனது நண்பர்களுடன் புதுச்சேரி சென்று சென்னை திரும்பிய போது கார் விபத்து ஏற்பட்டது. இதனால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட யாஷிகா தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இதோடு இந்த விபத்தில் தோழி பவானி உயிரிழந்த சம்பவம் அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதனால் சில காலம் சோஷியல் மீடியா பக்கம் வராமல் இருந்த இவர் தற்போது உடல் நலம் தேறிய நிலையில் மீண்டும் ஆக்டிவ் ஆகிவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்