கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் யஷ். இவர் நடித்த கே.ஜி.எஃப். திரைப்படம் இந்தியா முழுவதும் அவரை பிரபலமான நடிகராக மாற்றியது. கே.ஜி.எஃப். 1 மற்றும் 2ம் பாகம் பெற்ற வெற்றியால் அவருக்கு கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.


பிரபல கோயிலில் யஷ் வழிபாடு:


இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள பிரபலமான கோயிலுக்கு யஷ் தனது மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். கர்நாடகாவின் உஜிரே நகரத்தின் அருகே உள்ளது பெல்தங்கடி தாலுகா. இங்கு அமைந்துள்ள சூர்ய சதாசிவ கோயில். இந்த கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயில் ஆகும். 1200 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயில் ஆகும்.


இந்த நிலையில், பிரபல நடிகர் யஷ் தனது மனைவி ராதிகா மற்றும் குழந்தைகளுடன் அங்கு சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த பிறகு அங்கு கோயிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் யஷ் மற்றும் அவரது மனைவி பக்தர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.


புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள்:


யஷ் அங்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் கோயிலில் குவிந்தனர். ரசிகர்கள் பலரும் யஷ்ஷூடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். காவல்துறையினர் அங்கு ரசிகர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கே.ஜி.எஃப். படத்திற்கு பிறகு யஷ் தற்போது டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், நாளை மறுநாள் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் யஷ்ஷிற்கு இந்த கோயில் மிகவும் மனதிற்கு நெருக்கமான கோயில் என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக அடிக்கடி இவர் இந்த கோயிலுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.


விறுவிறுப்பாக டாக்ஸிக் படம்:


டாக்சிக் படத்தை கீது மோகன்தாஸ் என்ற மலையாள பட இயக்குனர் இயக்குகிறார். இந்த படத்தில் யஷ்ஷூடன் நவாசுதீன் சித்திக், சாய் பல்லவி, கரீனா கபூர், டாம் சாக்கோ, சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டாக்சிக் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. டாக்சிக் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், லண்டனில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.


கே.ஜி.எஃப். 2ம் பாகம் வெளியாகி 2 ஆண்டுகளாக யஷ் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் டாக்சிக் படத்தின் வெளியீட்டிற்காக காத்துள்ளனர். கே.ஜி.எஃப். படம் யஷ்ஷிற்கு இந்திய அளவில் ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை வாங்கி தந்துள்ளதால் அதற்கேற்றாற்போல ஆக்‌ஷன் படமாக டாக்சிக் உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


டாக்சிக் படமும் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.