Yami Gautam : முதல் குழந்தைக்கு தாயானார் ஜெய் பட நடிகை யாமி கெளதம்...ஆணா ? பெண்ணா?

பாலிவுட் நடிகை யாமி கெளதமுக்கு கடந்த மே 10 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது

Continues below advertisement

யாமி கெளதம்

பஞ்சாபி இயக்குநர் முகேஷ் கெளதமின் மகள் யாமி கெளதம், தொடக்க காலத்தில் சோப் மற்றும் ஃபேர் & லவ்லி விளம்பரங்களில் நடித்து பின் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்த விக்கி டோனர் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ’ தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்கிற படத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடித்தார். அக்‌ஷய் குமார் நடித்து கடந்த ஆண்டு வெளியான ஒ.எம்.ஜி 2 ஆம் பாகத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Continues below advertisement

தமிழ், தெலுங்கு , கன்னடம் , இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் யாமி கெளதம், கடந்த 2015 ஆம் ஆண்டு ’சனம் ரே’ படத்தில் நடித்து வந்தார்.  அப்படத்தில் நடித்த  நடிகர் புல்கித் சாம்ராட்டை அவர் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக எந்த விளக்கமும் அவர் தரப்பில் இருந்து அளிக்கப்படவில்லை, புல்கித் சாம்ராட்டின் மனைவி இந்தத் தகவலை வெளிப்படையாக தெரிவித்தப் பின்னர், இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கடந்த 2021-ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ’ஆதித்யா தார்’ என்பவரை திருமணம் செய்துகொண்டார் யாமி கெளதம். இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி தங்களது திருமணத்தை விமரிசையாகக் கொண்டாடினார்கள்.  திருமணத்திற்குப் பிறகு தனது பெயரை ’யாமி கெளதம் தார்’ என்று அவர் மாற்றவும் செய்தார்.

ஆண் குழந்தைக்கு தாயான யாமி கெளதம்

கடந்த சில மாதங்கள் முன்பாக யாமி கெளதம் நடித்த ஆர்ட்டிகள் 370 படம் வெளியானது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டில் தான் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் யாமி. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் தான் கருவுற்று இருப்பது தெரிய வந்ததாகவும் வயிற்றில் குழந்தையை சுமந்தபடி கடும் சிரமத்தில் தான் இப்படத்தில் நடித்து முடித்ததாக அவர் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து தற்போது தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார் யாமி கெளதம். கடந்த மே 10 ஆம் தேதி அட்சய திருதியையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அவர் கூறியுள்ளார். தனது மகனுக்கு வேதவித் என்று பெயர் வைத்துள்ளார்கள் இந்த தம்பதியினர். தனது மகன் தன் குடும்பத்திற்கு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் ஒரு ஆளுமையாக உருவாவான் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola