Vidya Pradeep Get Doctorate: இப்போ இவங்க டாக்டர் வித்யா ப்ரதீப்.. நெக்ஸ்ட் அமெரிக்காதான்.. நாயகி சீரியல் நாயகியின் சாதனை..
நாயகி சீரியலில் கதாநாயகியாக நடித்த வித்யா பிரதீப் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சன்டிவியில் ஒளிப்பரப்பான நாயகி தொடரில் கதாநாயகியாக நடித்த வித்யா பிரதீப், தமிழில் ‘அவள் பெயர் தமிழரசி’ படம் மூலம் அறிமுகமானதிரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘சைவம்’, ‘பசங்க 2’ ‘மாரி 2’ ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பயோடெக்னாலாஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற இவர், சென்னையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். முன்னதாக, Stem Cell Biology துறையில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், மீண்டும் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ இந்த கண் மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். இந்த எல்லையை எட்டியிருப்பதை நினைத்து நான் மிகவும் பெருமை படுகிறேன். நான் சென்னை வந்ததன் நோக்கம் நிறைவேறிவிட்டது. தற்போது நான் டாக்டர் பட்டம் பெற்றும் ஆராய்ச்சியாளர் ஆகிருக்கிறேன். இந்த இடத்தை நான் அடைவதற்கு கடினமாக உழைத்திருக்கிறேன். நிறைய விஷயங்களை நான் இழந்திருக்கிறேன். இந்த இடத்திற்கான பொறுப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். என்னால் முடிந்த வரை இந்த பொறுப்புக்கு தேவையான அனைத்தையும் என்னால் முடிந்த வரை நான் செய்வேன். ஆராய்ச்சிக்கான பணிகளை நான் அமெரிக்காவில் மேற்கொள்ள இருக்கிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையை சேர்ந்த அனைவருக்கும் எனது நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.