நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் காதலனை நினைவுகூர்ந்த வித்யா பாலன் அவரை வசைச் சொற்களால் திட்டியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


வித்யா பாலன்


நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்ட ’ The Dirty Picture'  திரைப்படத்தில் சிறப்பாக நடித்து, தேசிய விருது வென்று நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை வித்யா பாலன். கேரள மாநிலம், பாலக்காட்டில் பிறந்த வித்யா பாலன், இயக்குநர் மணிரத்னத்தின் ‘குரு’, இயக்குநர் பால்கியின் ‘பா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டின் பிரபல நடிகைகளுள் ஒருவராக வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர். தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் ரன் படத்தில் நடிக்க இருந்தார் வித்யா பாலன். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்தப் படத்தில் இருந்து விலகினார். இதனை அடுத்து அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 


The Dirty Picture படத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரித்தது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டார் வித்யா பாலன். ஆனால் இந்த விமர்சனங்களை தைரியமாக எதிர்கொண்டு ஊடகங்களுக்கு சரியான பதிலடி கொடுத்து கவனமீர்த்தார்.


முதல் காதலனால் ஏமாற்றப்பட்டேன்


2012ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்துகொண்டார் வித்யா பாலன். தற்போது ’தோ ஆர் தோ பியார்’ (Do Aur Do Pyaar) படத்தில் நடித்துள்ளார் வித்யா பாலன். திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவருடன் உறவில் இருக்கும் தம்பதிகள். ஒரு பயணத்தின்போது இந்த தம்பதியினர் மீண்டும் தங்களுக்கு இடையிலான காதலை எப்படி புதுபித்துக் கொள்கிறார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது வித்யா பாலன் தனது முதல் காதலைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.


”என் முதல் காதலன் என்னை ஏமாற்றி இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்தார். இந்த உண்மை தெரிந்ததும் நாங்கள் இருவரும்  பிரிந்துவிட்டோம் . நாங்கள் இருவரும் பிரிந்த சில நாட்களுக்குப் பிறகு அவர் தன்னுடைய முன்னாள் காதலியுடன் டேட் செல்ல இருப்பதாகக் கூறினார். அப்போதே நான் நொறுங்கிவிட்டேன். ஆனால் இன்று நான் ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன்“ என்று கூறியுள்ளார்.


தனது முன்னாள் காதலனைப் பற்றி பேசியபோது அந்த நபரை வித்யாபாலன் மோசமான வசைச் சொல்லால் திட்டியது குறிப்பிடத்தக்கது.