போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி சரத்குமார். முதல் படத்தில் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் அவை எதுவும் பெரிய வெற்றிபெறவில்லை. அதிகபட்சமாக விஜய் நடித்த சர்கார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். வரலக்ஷ்மி கடந்த ஆண்டு நிகோலாய் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிக்கோலாய் தனது மகளுடன் இருந்து வந்தார். அவரை திருமணம் செய்துகொள்வது தொடர்பாக வரலக்ஷ்மி நிறைய் விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் தனது குடும்பத்தின் ஆதரவு அவருக்கு இருந்ததால் தைரியமாக விமர்சனங்களை எதிர்கொண்டார்.
40 வயதை எட்டிய வரலக்ஷ்மி
இன்று வரலட்சுமி தனது 40 ஆவது வயதை எட்டியுள்ளார். அவரது பெற்றோர்களான சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். தனது பிறந்த நாளை வரலட்சுமி சென்னை எழும்பூரில் உள்ள சைலண்ட் கேர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது இப்படி கூறினார்.
புற்று நோய் பற்றி விளிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி சரத்குமார்
" புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்தும் மருத்துவர்களோடு என்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். புற்று பற்றி பொதுவாக நிறைய பேருக்கு விளிப்புணர்வு இருப்பதில்லை ஆனால் நமக்கு நெருங்கியவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் மட்டுமே தெரியும். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த சிறிய உதவியை செய்தால் கூட போதும் . அதே போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் இருந்து கல்கத்தா வரை சைக்கிளில் பயணம் செய்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். " வரலட்சுமி தெரிவித்துள்ளார்
அதேபோல் சமீபத்தில் தனது கணவருடன் ஹைதராபாதிற்கு குடி பெயர்ந்துள்ள வரலட்சுமி அங்கிருக்கும் ஹெல்பிங் ஹேண்ட் குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்கிருந்த 62 குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.