கேஎஃப்சி நிறுவனத்தைத் திட்டி நடிகை வனிதா பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.


தமிழ் சினிமா, டெலிவிஷன் உலகில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் கண்டெண்ட் கொடுத்து சர்ச்சைகளுடனேயே வலம் வருபவர் நடிகை வனிதா  விஜயகுமார்.


கோலிவுட்டில் சந்திரலேகா படத்தின் முலம் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமான நடிகை வனிதா, தொடர்ந்து நிகழ்ந்த தனது குடும்ப சச்சரவுகள் மூலம் சர்ச்சை வளையத்தில் சிக்கினார்.


எனினும் கடந்த சில ஆண்டுகளாக தன் குடும்ப சச்சரவுகள் தாண்டி குக்கு வித் கோமாளி, பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம மக்கள் மனங்களை வென்ற வனிதா மற்றொருபுறம் தன் திருமண வாழ்வு,அரசியல் தலைவர்கள் தொடங்கி எவரையும் கடுமையாக விமர்சிப்பது என சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவே இருந்து வருகிறார்.


தற்போது வனிதா அந்தகன், அநீதி, சிவப்பு மனிதர்கள் என பல படங்களிலும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.  மற்றொருபுறம் தொலைக்காட்சி தொடர்களிலும் வனிதா நடித்துவரும் நிலையில், தனது யூட்யூப் சானல் மூலமும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.


அந்த வகையில், முன்னதாக கேஎஃப்சி சிக்கன் ஆர்டர் செய்ததில் ஏற்பட்ட அதிருப்தி குறித்து நடிகை வனிதா பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.


ஹைதராபாத் விமான நிலையத்தில் கேஎஃப்சியில் சிக்கன் விங்ஸ் ஆர்டர் செய்த தனக்கு மிகமிக சிறிய அளவிலான விங்ஸ் உணவு டெலிவரி செய்யப்பட்டதாக வனிதா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள வனிதா,  ”மிக மோசமான சர்வீஸ். உலகிலேயே மிகவும் குட்டி குட்டியான சிக்கன் விங்ஸை இங்கு தான் பார்க்க முடியும். இது சிக்கனா இல்லை காக்காவா என்றும் தெரியவில்லை, இது இந்தியர்களை பெருமைப்படுத்தும் விஷயம்” என விமான நிலைய நிர்வாகத்தையும் சேர்த்து சாடியுள்ளார்.


இந்நிலையில் வனிதாவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.


 






அனைவரையும் பாரபட்சமின்றி கறாராக விமர்சித்து வரும் வனிதா முன்னதாக பிக் பாஸ் விக்ரமனுக்கு ஆதரவாக பதிவிட்ட விசிக தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்தார்.


பிக பாஸ் நிகழ்ச்சிக்காக ஃபைனலிஸ்ட் விக்ரமனுக்கு ஆதரவாக ட்விட்டரில் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இதற்கு தன் இன்ஸ்டா பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் வனிதா. இது ஒரு அரசியல் ஸ்டண்ட் எனவும், பதவியில் இருக்கும் எம்பி தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு ரியாலிட்டி ஷோவில் போட்டியாளருக்கு வாக்களிக்க சொல்வதாகவும் வனிதா சாடிய நிலையில், வனிதாவின் இந்தப் பதிவும் வைரலானது.


மேலும் படிக்க: PS 2 First Single: “குந்தவையும் வந்தியத்தேவனும்” .. வெளியானது “பொன்னியின் செல்வன்-2” படத்தின் அப்டேட்.. என்னன்னு தெரியுமா?