Vanitha Vijayakumar: ‘விஜய்க்கு சகோதரியாக என்னால நடிக்க முடியாது’ .. நடிகை வனிதா விஜயகுமார் திட்டவட்டம்..!

கடந்த 2 ஆண்டுகளில் 17 படங்களில் நடித்து முடித்துள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

கடந்த 2 ஆண்டுகளில் 17 படங்களில் நடித்து முடித்துள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

ஜெயில் படத்திற்கு பிறகு இயக்குநர்  வசந்தபாலன், ‘அநீதி’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், அர்ஜூன் சிதம்பரம், வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை இயக்குநர் ஷங்கர் தனது எஸ்.பிக்சர்ஸ் பேனரில் வெளியிட்டுள்ளார். 

இந்த படம் மீண்டும் நடிகை வனிதாவுக்கு திரையுலகில் கம்பேக் ஆக அமைந்துள்ளது. படத்தில் அவரின் கேரக்டர் ரசிகர்கள் வனிதாவுக்கு பாராட்டைப் பெற்று கொடுத்துள்ளது.  இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய வனிதா விஜயகுமார், ‘நடிப்பை விட பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ எனக்கு மேலும் ரீச் கொடுத்தது. கடந்த 2 ஆண்டுகளில் கிட்டதட்ட 17 படங்களில் நடித்துள்ளேன். அதில் முதல் படமாக அநீதி படம் வெளியாகியுள்ளது. அனைத்து படங்களும் நல்ல கதைகளோடு, கேரக்டர்களும் அமைந்திருந்தது. எஸ்.பிக்சர்ஸ் பேனரில் வசந்தபாலன் இயக்கத்தில் மீண்டும் வனிதா அறிமுகமானது பெருமையாக உள்ளது’ என கூறினார். 

தொடர்ந்து, ரசிகர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு வனிதா பதிலளித்தார். அதில், ‘விஜய்க்கு தங்கச்சியா நடிக்க வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள்?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘விஜய்க்கு சகோதரியாக என்னால் நடிக்க முடியாது. அது ஒர்க் அவுட்டும் ஆகாது. அம்மாவா கூட நடிப்பேன். ஆனால் கண்டிப்பாக சகோதரியாக நடிக்க மாட்டேன்’ என தெரிவித்தார். தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில், ‘சமீபத்தில் நீங்கள் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தது வைரலானது. விஜய் புகைப்பிடித்தால் மட்டும் விமர்சிக்கிறார்கள். ஆனால் வனிதாவுக்கு ஒன்றும் சொல்ல மாட்டுக்காங்க’ என ரசிகர்கள் பலரும் தெரிவித்தது பற்றி கருத்து கேட்கப்பட்டது. 

அதற்கு, ‘என்னை பொறுத்தவரை இது பொது அறிவு இல்லாத விஷயம். ஒரு பிரச்சினைக்கு என்ன காரணம்  சொல்கிறீர்கள் என்பது முக்கியம். ஒரு 3 வயசு குழந்தை பாத்துட்டு விஜய் புகைப்பிடிப்பது சரி என நினைக்கிதுன்னா.. முதல்ல சூப்பர் ஹீரோக்கள் மேல் தான் வழக்கு போட வேண்டும். நடிகர்களை குறை சொல்லாதீர்கள். கதைக்கு தேவை என்றால் செய்ய தான் வேண்டும் . இந்த மாதிரி வழக்கு போடுறது பப்ளிசிட்டிக்காக பண்ணுகிறார்கள். குழந்தைகளுக்கு எது சரி, தவறு என சொல்லி கொடுங்கள். குழந்தைகள் தனக்கானதை முடிவு செய்யும்’ என வனிதா குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola