சின்னத்திரையில் நடித்தால் வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெறுவது கடினம். அதிலும் நாயகியாகவோ, நாயகனாகவோ நடிக்கவே முடியாது என்ற காலக்கட்டம் தற்போது மாறியிருக்கிறது. பல நடிகர் , நடிகைகள் சின்னத்திரையில் இருந்து சினிமாவில் கலக்கி வருகின்றனர் . அதில் ஒருவர்தான் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என கொண்டாடப்படும் வாணி போஜனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் செம ஆக்டிவ். ஓ மை கடவுளே திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு மகான் திரைப்படத்திலும் , விக்ரமிற்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் கதையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக அவரது காட்சிகளை மட்டும் நீக்க வேண்டியதாகிவிட்டது என இயக்குநர் வருத்தம் தெரிவித்திருந்தார். வாணி போஜன் நடிக்க வருவதற்கு முன்னதாக என்னவாக  இருந்தார். எப்படி சினிமாவிற்குள் வந்தார் என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

Continues below advertisement


 







அதில் "சின்ன வயசுல இருந்தே எனக்கு ஏர்லைன்ஸ் கனவு. யாராவது என்ன ஆகப்போறேன்னு கேட்டாக் கூட ஏர் ஹோஸ்டர்ஸ்னுதான் சொல்லுவேன். என் அப்பா ஃபோட்டோகிராஃபர் அதனால எனக்கு இரண்டு எண்ணங்கள் இருக்கும் . ஒன்னு மாடல் , மற்றொன்று ஏர் ஹோஸ்டர்ஸ்.இரண்டுமே என்னுடைய  கம்யூனிட்டிக்கு செட் ஆகாத வேலை. நான் டிகிரியே வாங்கவில்லை.அதனால் எனக்கு கிடைக்க வேண்டிய மேனேஜர் வேலை தவறிப்போனது. அதை நம்பி வேலையை விட்டு சிரமப்பட்டேன் . அந்த சமயத்தில்தான் எனக்கு முதல்ல  விளம்பர படங்கள்ல வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ஷார்ட் ஃபிலிம் , சீரியல் அப்படித்தான் வாய்ப்பு கிடைத்தது.


தெய்வ மகள் சீரியல்தான் எனக்கு படங்கள் கிடைக்க முக்கிய காரணம்.நான் வேலையை விட்டுட்டு வரும் பொழுது 320 ரூபாய் இருந்தது. இப்போ எனக்கு சென்னையில வீடு , கார் இருக்கு . அதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. எல்லாமே கடின உழைப்புனு சொல்ல வர்றேன். சினிமாவுல கிளாமர் , கிளாமர்னு சொல்லுறாங்க.அப்படினா என்னவென்றே எனக்கு தெரியவில்லை. ஆடையில கிளாமர் காட்டனும்னு சொல்லுறாங்களா அல்லது நடிப்புல கிளாமர் காட்டனும்னு சொல்லுறாங்களானே புரியவில்லை.


இயக்குநர் குமரேசன்கிட்ட நான் நிறைய திட்டு வாங்கிருக்கேன். பொது இடத்துல இருக்கோம்னு கத்தாம இருக்கேன்னு சொல்லுவாரு. கண் கலங்கி ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்னு ஃபீல் பண்ணியிருக்கேன். ஆனாலும் அதை நான் தனிப்பட்ட தாக்குதலா எடுத்துக்க மாட்டேன். அவர் அடுத்த நிமிடமே சாதாரணமா பேசுவாரு. அவருக்கு நான் எப்போதுமே பெரிய நன்றி சொல்லனும்.நான் சிறப்பா நடிக்கனும்னு அவர் ரொம்ப மெனக்கெடுவார். அதேபோல நிறைய புராஜெக்ட்ஸ் பணத்துக்காக பண்ணியிருக்கேன் , விருப்பம் இல்லாமல் “ என மனம் திறந்திருக்கிறார் வாணி போஜன்.