பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், தாழ் திறவாய் என நடிகர் வாணி போஜனின் 2022ம் ஆண்டு ஷெட்யூல் மிகவும் டைட்டாகவே இருக்கிறது. இதற்கிடையே தனது ஹேர்கலர் வீடியோ ஒன்றை அண்மையில் இன்ஸடாவில் பதிவேற்றியுள்ளார் வாணி போஜன். பாலிவுட்டில் அலியா பட் நடித்து அண்மையில் வெளியான கங்குபாய் கத்தியாவாடி படம் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தின் பாடல் ஒன்றை பிஜிஎம்மாக அந்த வீடியோவில் சேர்த்துள்ளார்.
வீடியோவுக்கு ‘புது ஹேர் கலர்’ என கேப்ஷனும் இட்டுள்ளார்.வாணி, விக்ரம் மற்றும் துருவ்வுடன் நடித்து அண்மையில் வெளியான மகான் திரைப்படம் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘மஹான்’ (Mahaan). கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனம் வந்திருக்கும் நிலையில், படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகள் இடம் பெறாததற்கு ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, மஹான் திரைப்படத்தின் நடிகர், நடிகைகளை படக்குழு அறிவித்தபோது வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதனை அடுத்து விக்ரம் - வாணி போஜன் இருக்கும் படத்தின் ஸ்டில் வெளியாகி வைரலானது. இதனால், திரையில் வாணி போஜனை காண அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால், படத்தில் வாணி போஜன் நடித்திருந்த காட்சிகள் இடம் பெறாதது சர்ச்சையை கிளப்பியது. படத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து வாணி போஜன் கருத்து தெரிவித்திருக்கிறார். “மஹான் படத்திற்காக 8 -9 நாட்கள் வேலை செய்திருக்கிறேன். படத்தின் முதல் பாதி கதையில் நான் நடித்திருந்தேன். ஆனால், நான் நடித்திருந்த காட்சிகளுக்கும், இரண்டாம் பாதிக்கும் சம்பந்தமே இருக்காது. இதனால், கார்த்திக் சார் தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்புவிடுத்து விளக்கினார். இப்படி ஒரு சூழலில் என்ன செய்வது என்று என்னிடம் கேட்டார். வேண்டுமென்றால் எடிட்டிங்கில் எடுத்துவிடுங்கள் என தெரிவித்திருந்தேன்.