விருமன் படத்திற்கு முன்னால் ஒரு நேர்காணலில் நான் நடிகர் கார்த்தியுடன் நடிக்க ரொம்ப ஆசைப்படுறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அதிசயம் என்னவென்றால் 15 நாட்களில் எனக்கு 2டி நிறுவனத்தில் இருந்து கால் வந்தது. முதலில் நான் அதை ஏதோ ஒரு விளையாட்டு என்றே நினைத்தேன்.
அப்புறம் என்னிடம் பேசியவர் 2டி நிறுவனத்திலிருந்து விஜய் பேசுகிறேன். முத்தையா சார் படம் என்றெல்லாம் விளக்கினார். எனக்கு முத்தையா என்றவுடன் ஒரு தயக்கம் வந்தது. காரணாம் குட்டிப்புலிக்காக முத்தையா என்னிடம் பேசினார். சசிகுமார் அம்மா வேடத்திற்கு ஒப்பந்தம் செய்தார். அப்புறம் அது ட்ராப் ஆகிவிட்டது. அதன் பின்னர் மருது படத்தில் விஷால் பாட்டிக்கு டப்பிங் பேச கூப்பிட்டார். நானும் டப்பிங் ஸ்டூடியோ வரை சென்ற பின்னர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதனால் இந்த முறை அவரிடமே பேசி உறுதி செய்தபின்னர் தான் நடிப்பது என்று உறுதியாக இருந்தேன். 2டி நிறுவன ஊழியரிடம் முத்தையா நம்பரைக் கேட்டேன். முத்தையாவிடம் பேசி எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டேன்.
பிரகாஷ் ராஜ் இருக்கிறார் என்ற போது கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஏனென்றால் அவர் ரொம்ப டெரரா ஆகிட்டார். அப்புறம் ராஜ்கிரன் அண்ணா இருந்தார். அவர் எனக்கு மிகப்பெரிய பக்க பலம். அவருடன் ஆன்மீகம் சார்ந்து நிறைய பேசுவோம். அப்புறம் படத்தில் எனக்கு பிடிக்காதவர் கார்த்தி. அவரை நான் ஒதுக்கி வச்சிருப்பேன் என்று முத்தையா சொன்னதுமே எனக்கு தூக்கி போட்டுடுச்சு. நான் கார்த்தி கூட நடிக்க ஆசைப்பட்டா என்னை அவருக்கு எதிரியாக்கிவிட்டார்கள். அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மற்றபடி செட்டில் நாங்கள் நன்றாகப் பேசிக் கொண்டோம். சூட்டிங் நாட்கள் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது.
அப்புறம் நான் படத்தின் ஹீரோயின் அதிதி பற்றி சொல்ல வேண்டும். அதிதி இந்தக் கால டிஜிட்டல் பொண்ணு. சரி என்று நான் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டெய்ன் பண்ணேன். ஆனால் அந்தப் பொண்ணு ட்ரை சைக்கிள் ஓட்டி வந்ததைப் பார்த்து அசந்து போனேன். செட்டில் ரொம்ப இயல்பாக ஜோவியலாக இருந்தது அந்தப் பொண்ணு. எவ்வளவு பெரிய இயக்குநரோட மகள் என்ற பந்தா கொஞ்சமும் இல்லை. ஷாட் முடிச்ச பின்னர் அந்தப் பொண்ணு அதுவே வந்து நான் தான் அதிதி என்று அறிமுகப்படுத்தி நல்லா பேசியது. ப்ராம்ப்டிங்கே இல்லாமல் அதிதி நடித்தது எனக்கு ஆச்சர்யம் கொடுத்தது என்றார்.
2டி நிறுவனம் பெஸ்ட்:
இந்தக் காலக்கட்டத்தில் எல்லா சினிமா நிறுவனங்களும் எங்க பட்ஜெட் இவ்வளவு ஓகேன்னா வாங்க என்பார்கள். ஆனால் 2டி நிறுவனத்தில் தான் உங்கள் எதிர்பார்ப்பு என்னவென்று கேட்டார்கள். நான் என் அண்ணனுக்கு ஆபரேஷன் என்பதைச் சொல்லிக் கேட்டேன். மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டார்கள். நான் இப்படி ஒரு நிறுவனத்தைப் பார்த்தது இல்லை.
பருத்திவீரன் படத்துக்கு பின் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த கார்த்தி, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் கிராமத்துக்கு நாயகனாக களமிறங்கிய படம் தான் கொம்பன். முத்தையா இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீசான இப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்ததோடு, கார்த்தியின் கெரியரில் முக்கிய படமாகவும் அமைந்தது. இதன் பின்னர் 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நடிகர் கார்த்தி, மீண்டும் முத்தையா உடன் கூட்டணி அமைத்துள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து இருக்கிறார். இந்தப் படம் வசூல் ரீதியாக ஹிட் அடித்தது.