நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி மக்களின் பிரச்னைகள் குறித்து குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் மதுரையில் நடந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. திரையுலகிலும் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 2025 சைமா விழாவில் நடிகை த்ரிஷா விஜய் புகைப்படத்தை பார்த்து வெட்கப்பட்டு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த கூட்டணி
தமிழ் சினிமாவில் படங்களில் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகளாக இருப்பது விஜய் - த்ரிஷா. இவர்கள் இருவரும் முதல் முறையாக கில்லி படத்தில் இணைந்து நடித்தனர். இவர்களது கூட்டணி எப்போதும் தனி சிறப்பை பெற்றிருக்கிறது. லியோ படம் வரை இவர்களது கூட்டணி தொடர்கிறது. ஆன்ஸ்கீரினில் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக இருந்தாலும், ரியலில் நண்பர்களாக உள்ளனர். இருவர் குறித்து சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்டது. தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய பிறகு நடிகர் விஜய் தனிப்பட்ட முறையில் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பங்கேற்றது. அவரது திருமணத்திற்காக தனி ஜெட்டில் சென்றது. பின்னர், விஜய் பிறந்தநாளையொட்டி த்ரிஷாவின் நாய்குட்டியை விஜய் கொஞ்சுவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையானது.
வெட்கப்பட்ட த்ரிஷா
இந்நிலையில், 2025 சைமா விருது விழாவில் பங்கேற்ற நடிகை த்ரிஷாவிடம் விஜய் புகைப்படத்தை பகிர்ந்து அவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் எதை கேட்பீர்கள் என நடிகர் சதிஷ் கேள்வி எழுப்பினார். விஜய் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் அரங்கம் அதிர கூச்சலிட்டனர். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் வெட்கம் கலந்த சிரிப்போடு நின்ற த்ரிஷா, விஜய்க்கு அட்வைஸ் கொடுக்கணும் அவசியம் இல்லை. இந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். விஜய் தற்போது ஒரு புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார். அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவும், அவரது கனவுகள் நினைவாக வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி சாருக்கு நன்றி
பின்னர் ரஜினிகாந்த் புகைப்படத்தை பகிர்ந்து இவரிடம் எதை கேட்க நினைக்கிறீர்கள் என த்ரிஷாவிடம் கேள்வி கேட்டனர். அப்போது, இந்த நேரத்தில் ரஜினி சாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவரை மாதிரி ஒரு மனிதரை பார்த்தது இல்லை. படப்பிடிப்பில் அப்படி நடந்துகொள்வார். மனிதநேயத்துடன் எல்லோருடனும் பழகுவார். பெரிய நடிகரை போன்று இருந்தது இல்லை என த்ரிஷா தெரிவித்தார்.