மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மாற்றி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பொருட்களின் விலை தாறுமாறாக குறைகிறது. குறிப்பாக, ஜிஎஸ்டி வரி மாற்றப்பட்டது இந்திய வாகன சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறையப்போகும் பைக் விலை:
மஹிந்திரா, டொயோட்டா, டாடா, ரெனால்ட் என முன்னணி கார்கள் தங்களது கார்களின் விலையை குறைத்து அறிவிப்பைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இந்த ஜிஎஸ்டி விலை குறைப்பால் கார்கள் மட்டுமின்றி இரு சக்கர வாகனங்களின் விலையும் தாறுமாறாக குறைய உள்ளது.
350 சிசி திறன் கொண்ட எஞ்ஜினுக்கும் குறைவாக உள்ள இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், 350 சிசி திறன் எஞ்ஜின் கொண்ட இரு சக்கர வாகனங்களின் விலை பல ஆயிரங்கள் வரை குறைய உள்ளது.
எந்தெந்த பைக்குகள்?
1. Hero Splendour
2. Honda Shine
3. TVS Apache
4. Bajaj Pulsar
5. Royal Enfield’s Hunter
6. Royal Enfield’s Bullet
7. Royal Enfield’s Classic 350
8.Royal Enfield’s Meteor 350
தற்போதைய தகவல்களின்படி இந்த இரு சக்கர வாகனங்களின் விலை ரூபாய் 10 ஆயிரம் முதல் ரூபாய் 12 ஆயிரம் வரை குறைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலே கூறிய இந்த இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் ரூபாய் 1 லட்சம் வரை விற்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி புதிய வரிப்படி இதன் விலை குறைக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமாக பணம் மிச்சம் ஆகும்.
இந்த பைக்குகளின் விலை குறைப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த இரு சக்கர வாகனங்களின் விலை குறைக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியான பிறகு அதிகளவில் இந்த பைக்குகளின் விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கப்போகும் விலை:
அதேசமயம், மத்திய அரசு 350 சிசிக்கும் அதிகமான திறன் எஞ்ஜின் கொண்ட இரு சக்கர வாகனங்களின் விலை அதிகரிக்க உள்ளது. முன்பு 31 சதவீதத்தின் கீழ் இந்த வாகனங்களுக்கு ஜிஎஸ்டி இருந்த நிலையில், தற்போது இதன் ஜிஎஸ்டி 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், 350 சிசிக்கும் மேல் எஞ்ஜின் கொண்ட Royal Enfield Himalayan 450, KTM Duke 390 மற்றும் Triumph Speed 400 பாேன்ற பைக்குகளின் ஜிஎஸ்டி 40 சதவீதமாக மாறியுள்ளது. இதனால், இந்த பைக்குகளின் விலை முன்பு இருந்ததை காட்டிலும் பல மடங்கு உயர உள்ளது.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் பைக்குகளின் ஜிஎஸ்டி வரியை மாற்றியிருந்தாலும், மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், Ola Electric, Ather, TVS iQube மற்றும் Bajaj Chetak Electric போன்ற ஸ்கூட்டர்கள் விலை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI