தமிழக வெற்றிக் கழகம் மாநாடு


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 85 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகளில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


தவெக மாநாட்டில் த்ரிஷா ?


இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக முக்கிய அரசியல் பிரமுகர்கள் , நட்சத்திரங்கள் கலந்துகொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு அவர் தவெக மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தி கோட் படத்தில் த்ரிஷா தவெக கொடி நிறத்தி மஞ்சள் சிவப்பு என சேலை கட்டி வந்தது பேசுபொருளானது. தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோயியில் த்ரிஷா தேன்குழல் சாப்பிட்டபடி ஒரு சிவப்பு மஞ்சள் கொடியை பதிவிட்டுள்ளார். தவெக மாநாட்டிற்கு செல்வதை தான் அவர் சிம்பாளிக்காக சொல்கிறார் என ரசிகர்கள் இதனை தவறாக புரிந்துகொண்டுள்ளார். ஆனால் த்ரிஷா போட்டிருப்பது தவெக கொடி இல்லை ஸ்பெயின் கொடி , தற்போது த்ரிஷா ஸ்பெயினில் உள்ளார். ஆனால் அவரை ரசிகர்கள் குழப்பமடையச் செய்யவே இப்படி போட்டுள்ளார் என இன்னும் சிலர் தெரிவித்து வருகிறார்கள்.