நடிகை த்ரிஷா சமீப காலங்களில் தொடர் சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார். குறிப்பாக தவெக தலைவர் விஜயுடன் த்ரிஷா திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரும் விவாதப்பொருளானது . தற்போது த்ரிஷாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
தென் இந்திய சினிமாவில் 23 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதை எட்டிய த்ரிஷா இதுவரை திருமணம் செய்துகொள்ளாதது ரசிகர்களிடையே அடிக்கடி பேசுபொருளாகி வருகிறது. 2015 ஆம் ஆண்டு த்ரிஷாவுக்கு வருன் மணியன் என்கிற தொழிலதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது . திருமனத்திற்கு பின் த்ரிஷா நடிக்கக் கூடாது என கட்டாயப்படுத்தியதால் இந்த திருமணத்தை அவர் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. ஒரு சில தென் இந்திய நடிகர்களை த்ரிஷா டேட் செய்ததாகவும் பேசப்படுகிறது. ஆனால் யாருடனும் த்ரிஷா தனது காதலைப் பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தவெக தலைவர் விஜய் மற்றும் த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி தொடர்ச்சியாக தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன. ஒரு சில அரசியல் தலைவர்கள் விஜயை விமர்சிக்கையில் த்ரிஷாவை குறிப்பிட்டு பேசியது பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வதந்திகளை த்ரிஷா தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.
அண்மையில் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர் விஜய் கடந்த 4 ஆண்டுகளாக பிரபல நடிகை ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் அந்த நடிகை தொடர்ச்சியாக விஜயுடன் புகைப்படங்களை பதிவிட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு வெளியான ஒரு சில நாட்களிலேயே விஜயுன் த்ரிஷாவும் தயாரிப்பாளர் கல்பாத்தி இல்லத் திருமண நிகழ்வில் மேட்சிங்கான உடையணிந்து கலனதுகொண்டார்கள். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது
த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
த்ரிஷாவின் ஓவ்வொரு பதிவுகளிலும் தவெக ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்து வருகிறார். அந்த வகையில் அவரது தற்போதைய பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. " காதல் என்பது எல்லாமும் இல்ல. ஆனால் அந்த காதல் இல்லாமல் எல்லாமும் அர்த்தமற்றது" என்கிற வாசகத்தை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
