குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த்ரிஷா , பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் மற்றும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
குட் பேட் அக்லி டீசர்
குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு தகவல் வெளியிட்டது. இதனால் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தார்கள். தொழில்நுட்ப சிக்கலான் இந்த அப்டேட் ஒரு மணி நேரம் தாமதமானது இதனால் அஜித் ரசிகர்கள் கடுப்பானார்கள். தற்போது குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தில் த்ரிஷாவின் ரம்யா கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.